Tuesday, April 28, 2020

காதல் என்னும் அத்தியாயம் 2:

நீங்க என்ற எண் கேள்விக்கு நான் என்ற நளின மொழியால் அந்த நங்கையின் உதடுகள் அவள் பெயரை என் காதுகளுக்கு காணிக்கை ஆக்கியது.
உடனே என் உதடுகள் உன் பெயரை சொல்லும் போது உள் நெஞ்சில் கொண்டாட்டம்; உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் என்ற பாடலை முணுமுணுத்தது.
மீண்டும் hello கேக்குதா என்றவுடன் கனவுலக கற்பனையில் மிதந்து கொண்டிருந்த நான் என்னை ஒரு முறை கிள்ளி பார்த்துக் கொண்டு நிஜ உலகத்திற்கு திரும்பினேன்.
உடனே சொல்லு, சொல்லு கேட்குது என்றேன். பொங்கல் வருது இல்ல உங்கள ஊருக்கு கூப்பிட அம்மா வீட்ல எல்லாருகிட்டயும் பேசணும்னு சொன்னாங்க அதனாலதான் call பண்ணேன் என்றால்.
நான் ஹாஸ்டல்ல இருக்கேன் அக்காவுக்கு கால் பண்ணு என்றேன். Ok நான் அக்காவுக்கு call பண்ணிக்கிறேன் என்றால். நான் phone னை வைக்கட்டுமா என்ற கேள்விக்கு மனசு வேண்டாம் என்றாலும் உதடு சரி என்றது.
அதன் பிறகுதான் எனக்கு நினைவுக்கு வந்தது நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தது எங்கள் சண்டைக்காரி இடம் என்று ஆனால் என் மனம் பெரியவங்களுக்கு உள்ள சண்டன நமக்கென்ன வந்தது என்று என்னை சமாதானப் படுத்தியது. இந்த சந்தோஷமான செய்தியை என் நண்பனிடம் கூற நான் ஓடினேன்.
அவன் கிரவுண்ட்ல cricket விளையாடிக்கொண்டிருந்தான். என்னுடைய சிரிப்பு கலந்த பேச்சிலிருந்து நடந்ததை யூகித்துக் கொண்ட என் நண்பன் என்னடா ஆளு call பண்ணா போல என்றான்.
உடனே நான் எப்படி டா என்றேன் அதான் முகத்தில் 100 வாட்ஸ் பல்ப் எரியுது என்றான். இருவரும் ஒருசேர நண்பேன்டா என்றோம். அங்கிருந்தவர்கள் இவனுங்க அலப்பறை தாங்க முடியலையே என்றார்கள்.
அவர்கள்  விளையாட என்னையும் அழைத்தார்கள் நானும் அவர்களோடு joined செய்துகொண்டேன்.
நாங்கள் விளையாடி விட்டு ஹாஸ்டலுக்கு வந்தோம் வழக்கம்போல என் நண்பன் அவனுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டான். அவனுடைய வேலையா என்னது அது என்பதுதானே உங்களுடைய கேள்வி? அவனுக்கு தெரிந்த இரண்டு விஷயம் ஒன்னு படிப்பு இன்னொன்னு cricket. 
Cricket already finished next? அதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.
நானும் படிப்பதற்கு முயற்சி செய்தேன் ஆனால், முடியவில்லை.
மனம் ஒரு குரங்கு மனம் அலைபாயும் என்றெல்லாம் மற்றவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன் இன்று தான் அதை நான் உணர்கிறேன். என் மனம் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது என்னுடைய சைனா செட் அத்த மக உன்ன நெனச்சு அழகு கவிதை ஒன்னு படிச்சேன் அத்தனையும் மறந்து புட்டேன் அடியே உன்ன பார்த்ததுமே என்று பாடியது.
நான் phone னை attend பண்ணி காதுல வச்சேன். Hello என்றாள் அக்கா சொல்லு என்றேன் நான். அத்தை இன்னைக்கு phone பண்ணாங்க என்றாள் வழக்கம் போல அப்பா பேசி இருக்க மாட்டாரே என்றேன் நான்.
இல்லை, இல்லை இன்னைக்கு அத்தை அப்பாகிட்ட பேசினாங்க அவங்களுக்கு உடம்பு சரி இல்லையாம் அதை சொல்லி புலம்பி ரொம்ப அழுது இருக்காங்க அப்பா சமாதானம் ஆயிட்டாரு அவங்க பொங்கலுக்கு நம்மள ஊருக்கு கூப்பிட்டாங்க அப்பாவும் வரன்னு சொல்லிட்டாரு.
ஊருக்கு என்றவுடன் எனக்கு ரொம்ப சந்தோசமா ஆயிடுச்சு அதை சொல்லத்தான் உனக்கு call பண்ணேன்.
 Ok நான் அப்புறம் கூப்பிடுறேன் என்று phone னை கட் செய்தாள்.
உடனே நான் என்னை மறந்து I am most happiest person in the world என்று கத்தி விட்டேன். தொடரும்

1 comment:

  1. நண்பா அருமை படிக்க படிக்க ஆவலாக உள்ளது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

    ReplyDelete