Tuesday, April 14, 2020

மனம் போனப்போக்கிளே:

நல்லது எது கெட்டது எதுநல்லவர் யார் கெட்டவர் யார் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டாள் நமது செய்கைகளும் நடத்தையும் விடைகளாகும். நம் நடத்தைக்கும் செய்கைக்கும் நாரதர், மனம் என்னும் மந்திர சாவி. காமத்தில் கட்டுண்டுகிடக்கும் ஒருவனுக்கு வேசியின் வாக்கே வேதவாக்கு என்பது போல, மனதோடு கட்டுண்டு கிடப்பது மூலை. மனதில் பெருகும் ஆசைகளுக்கு மருப்புச் சொல்லாமல் செயல்படுவதே அதன் வேலை. மனம் போநப் போக்கிளே மனிதன் போகளாமா? என்றால், நிச்சையமாகக்கூடாது. அதைத்தான் வள்ளுவர் சென்ற இடத்தால் செலவிடாது என்றார். புத்தர் துன்பத்திற்கு காரணம் பேராசை என்றார். இவற்றை நாம் படித்ததோடு மரந்துவிட்டுப் பாதைமாரி சென்றுகொண்டுஇருக்கிறோம். பகுத்தறிவை பெற்ற நாம் நன்மை தீமைகளைப் பகுக்க மறந்து மனித இணத்திற்கு அவப்பெயரை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆற்றுநீர் கடல் நீரில் கலந்து உப்புநீர் ஆவதுபோல, நன்மையும் தீமையும் கலந்து மனம் என்னும் கடலை உப்பாக்கிவிட்டது. உப்பு நீரை எவ்வளவு குடித்தாளும் தாகம் தீராது. அதன் விளைவே கொளை, கொல்லை, வன்கொடுமை போன்றவை. இதில் சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர் என்றபாரபச்சமே இல்லை. இது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அன்றாடம் நாம் படிக்கவும் பார்க்கவும் நேர்கிறது. இதற்கு தீர்வு நம் கையில். நாம் அடக்கவேண்டிய ஐம்புலன்களையும் அடக்கிவிட்டால் மனம் என்னும் மாலிகைக்கு திண்டுக்கல் பூட்டே போட்டுவிடளாம். புலன்களுக்குப்பூட்டு போட்டுவிட்டால் பலன்கள் தானாகக் கிடைக்கும்.                                     

No comments:

Post a Comment