Sunday, May 31, 2020

காதல் என்னும் அத்தியாயம் 7

வாங்க பாட்டுப்போட்டி பாதியிலேயே நிக்குது மீதமுள்ள இசை குயில்களின் இசையைக் கேட்டு விடலாம். அடுத்து பாடுபவர் இன் பெயரை தொகுப்பாளர் வாசிக்க ஆசை மச்சான் வாங்கி தந்த மல்லியப்பூ அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு என்று சொர்ணலதாவின் தங்கச்சி போல் பாட அதைக்கேட்டு மல்லிகைப்பூ வாங்க மறந்த ஆண்கள் சிலர் மனைவிகளைப் பார்த்து கண்ணடிக்க அவர்கள் கண்ணம் சிவக்க அப்புறம் என்னஇரவு இன்பமயம் தான் என்று மல்லிகைப் பூ வாங்க மச்சான்கள் புறப்பட்டனர்.
இது இப்படி இருக்க அடுத்து வந்தவர் நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல என்று தொடங்க பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த சில குமரிகள் மேடையை நோக்கி உன் தூக்கத்தை கெடுத்தது யார்? என்று கேட்டு கேலியும் கிண்டலும் மாய் சிரித்தனர். அவர்களுடைய சிரிப்பு இசைக்கு இனிய ராகம் சேர்த்தது.
நீங்கள் திட்டுவது எனக்கு கேட்கிறது; உங்கள் பொறுமைக்கு நன்றி. அடுத்து வருவது அவள்தான் எல்லோரும் காத்திருந்தது இதற்காகத்தான் என்பது அவர்களுடைய உற்சாக வரவேற்பிளே தெரிந்தது. எனக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை.
அடுத்து நடப்பதை அறியும் time machine போல, எனக்கும் ஒரு power இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
இப்படி நான் எனக்குள் யோசித்துக் கொண்டிருக்க அடுத்து நீங்கள் கேட்க இருக்கும் பாடல் ராஜா sir இசையில் ஜானகி அம்மா பாடியது. அந்த பாடல்  இப்பொழுது நம்ம ஊரு ஜானகியின் குரலில் என்று தொகுப்பாளர் அவர் பங்குக்கு ஏதோ ஒன்றை சொல்லி வைக்க கூட்டம் ஆர்ப்பரித்தது. அவள் குரலோ எனை இழுத்தது.
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே என்ற மெல்லிசை அவள் மென்மையான குரல் ஓசையில் மெருகேறி கொண்டிருந்தது. என் இதயம் இடம் மாறிக் கொண்டிருந்தது.
இதயத்தை ஈர்த்த அந்த வரிகள் இதோ உங்களுக்காக உன்னை எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னி பொண்ணு தானே என் மாமனே, என் மாமனே ஒத்தையிலே அத்த மக உன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணுரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே என்று பாடி முடிக்க (செம்புல பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!) என்ற சங்க இலக்கிய வரிகள் சாட்சியாக இரு இதயங்கள் இரண்டறக் கலந்தன.
என்னவள் பாடி முடித்ததும் தொகுப்பாளர் இத்துடன் பாட்டுப்போட்டி முடிவடைந்தது என்று கூறி முடித்து வைத்தார். அடுத்து வரவேற்புரையுடன் பரிசளிப்பு விழா தொடங்கியது. பாட்டு போட்டியின் முடிவுகளை அறிந்துகொள்ள உங்களைப் போல் எனக்கும் ஆர்வமாய் இருந்தது.ஆனால் முதலில் மற்ற போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாட்டு போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு முதல் பரிசு பெற்றவர் ஊர் பெரியவர்களுக்காக மீண்டும் ஒருமுறை மேடையில் தனது பாடலை பாடினார்.
எல்லோருடனும் சேர்ந்து மீண்டும் புதிதாய் கேட்பது போல நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்பிறகு பாட்டு போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. மூன்றாம் பரிசு சின்ன சின்ந ஆசை என்ற பாடலை பாடியவருக்கும் இரண்டாம் பரிசு நான் ஆளான தாமர என்ற பாடலை பாடியவருக்கும், முதல் பரிசு என்னவளுக்கும் கிடைத்தது.
அதை தொடர்ந்து வெற்றியாளர்கள் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்க
நன்றி உரையோடு பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது. சற்று நேரத்தில் மைதானத்தில் இருந்த அனைவரும் கலைந்து அவரவர் வீட்டிற்கு செல்ல தொடங்கினர். நாங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அவள் பரிசுகளை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து பார்க்க சொன்னாள். அதில் இரண்டு hot box சும் ஒரு tiffin box சும் இருந்தது. நான் அதை பார்த்து விட்டு அவளிடம் கொடுத்து விட்டேன்.
அத்தைக்கு ஒரே பெரு மிதம் மகள் வாங்கிய பரிசுகளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டே அனைவரும் தூங்கி விட்டோம். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். ஆனால், நாங்கள் வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. அதனால் காலை உணவை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாரானோம்.
அத்தை மேலும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு போகலாம் என்றார். ஆனால், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வேலை செய்யும் இடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே விடுமுறை கொடுத்து இருந்ததால் அதனைக் கூறி அத்தையை சமாதானப் படுத்திவிட்டார்கள். கிளம்பும் பொழுது தாத்தா என் கையை பிடித்துக்கொண்டு அடிக்கடி தாத்தாவைப் பார்க்க வரணும் என்றார்.
நான் சரி தாத்தா கோடை விடுமுறைக்கு வருகிறேன் என்றேன். அடுத்து தாத்தா அப்பா, அம்மா, அத்தை ஆகியோரை அழைத்து கூறிய செய்தி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்க செய்தது. அச்செய்தி எனக்கு கரும்பு சாற்றுடன் தேன் கலந்து அத்தோடு முக்கனியின் சுவை கூட்டி தயாரித்த அமுழ்தம் போன்றது.
என் இதயம் இயக்க வேகத்தை கூட்டி இன்ப சுற்றுலா சென்று கொண்டிருந்தது. தொடரும், Edit box, 1 of 2

Saturday, May 23, 2020

காதல் என்னும் அத்தியாயம் 6:

கடையில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பிறகு அனைவரும் மீண்டும் நடக்கத் தொடங்கினோம். மாலை நேர சூரியன் மறைந்து கொண்டிருந்தது. இளம் குளிர் காற்று வீச அவள் துப்பட்டா என் முகத்தோடு பேசஅதை மற்றொரு கையில் பிடித்து செல்லமாக கடிந்து கொண்டாள்.
அதன் சுவாசத்தில் அவள் வாசத்தை உணர்ந்தேன் மேலும் அவள் செய்கையால் பாசத்தை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் அனைவரும் கோயிலை அடைந்தோம். கோயில் பூசாரி அப்பாவுக்கு தெரிந்தவர் முன்பே சொல்லி வைத்தபடி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.
எங்களை பார்த்தவுடன் பூசாரி வாங்க, வாங்க எல்லாரும் சேமமா என்று நலம் விசாரித்தார். அதன்பிறகு பூஜைக்கு நாழி ஆயிடுச்சு வாங்கோ என்றார்.எல்லோரும் கோயிலுக்குள் சென்று பூஜையை நன்றாக முடித்து விட்டு வெளியில் வந்தோம்.
என்ன மெட்ராஸ் காரரே இப்ப தான் இங்க வரதுக்கு உங்களுக்கு நேரம் கிடைச்சதா? என்ற ஒருவரிடம் அப்பா எங்களை‌ introduce பண்ணி வைத்தார். யாரோ ஊர் பெரியவர் என்றார்.
இப்படியே எங்களை நலம் விசாரித்த நாலு ஐந்து பேரிடம் பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தோம். இரவு உணவை முடித்து விட்டு ரொம்ப டயர்டாக இருந்ததால் எல்லோரும் தூங்க சென்று விட்டோம்.
காலையில் மாட்டு பொங்கலை மகிழ்வோடு கொண்டாட சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து தயாரானோம். உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் பெருமையாக அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் மாட்டுப் பொங்கல் உழவனின் உடல், பொருள், ஆவியாக விலங்கும் மாடுகளை சிறப்பிக்கும் வகையில் அமையும்.
மாடுகளை வைத்திருக்கும் உழவர்கள் அவற்றை நன்றாக குளிப்பாட்டி கொம்புகளை சீவி அதற்கு வண்ணமிட்டு வண்ண வண்ணப் பொட்டுகளால் அழகாக அலங்கரிப்பார்கள். அதை பார்ப்பதற்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். நாள்தோறும் அவ்வாறு பராமரிக்க பட்டாள் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.
அடிக்கடி நடைபெறும் ஒன்று புதுமையாக தோன்றாது அல்லவா? அதனால்தான் உழவர்களின் செல்வங்கள் ஆகிய மாடுகள் வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. அதன் பிறகு பொங்கல் வைத்து படைத்துவிட்டு மாடுகளுக்கு கொடுப்பார்கள்.
எங்கள் வீட்டில் மாடுகள் இல்லை அதனால் அவ்வளவு சிறப்பாக கொண்டாடவில்லை. எங்கள் வீட்டில் மதிய உணவிற்காக ஆடு, கோழி, மீன் என வகைவகையான அசைவ உணவு தயாராகிக்கொண்டிருந்தன. பொதுவாக மாட்டுப்பொங்கலன்று அனைவர் வீட்டிலும் அசைவ உணவு செய்வது வழக்கம்.
மதிய உணவு நன்றாக இருந்தது. அன்றைய நாள் போரடிக்காமல் செல்ல அடுத்த நாள் ஊரே கலை கட்டியது. அடுத்த நாள் காணும் பொங்கல் அன்றுதான் பொங்கல் கொண்டாட்டம் முழுமை பெறும். பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
குட்டீஸ்களுக்கு பலுன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போன்றவையும் இளவட்ட ஆண்களுக்கு மட்டைப்பந்து, கபடி, நீச்சல் போன்றவையும் குமரி களுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி போன்றவையும் பொதுவான போட்டிகளாக உரி அடித்தல், கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவையும் நடைபெறும்.
போட்டிகளை எவ்வித பிரச்சனையும் இன்றி நடத்தி தருவது ஊர் இளைஞர்களுடைய பொறுப்பு. பரிசுகள் கொடுக்கும் பொறுப்பை ஊர் பெரியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
போட்டிகள் ஊர் கோவில் முன்பு இருக்கும் பொது மைதானத்தில் நடைபெறும். போட்டியாளர்களை உற்சாகப்படுத்த ஊர் மக்கள் அனைவரும் மைதானத்தில் கூடுவர். பெற்றோர்கள் குழந்தைகளையும், கணவர்கள் மனைவிகளையும், மனைவிகள் கணவர்களையும், நண்பர்கள் தங்கள் நண்பர்களையும், காதலர்கள் தங்கள் காதலர்களையும் கைதட்டி உற்சாகப் படுத்துவார்கள்.
போட்டியில் தோற்று விட்டால் ஆண் பெண் என்ற பாரபட்சமில்லாமல் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள். சிலர் பெற்றோர்களுக்காக, சிலர் மனைவிக்காக, சிலர் கணவருக்காக, சிலர் காதலர்களுக்காக, சிலர் நண்பர்களுக்காக, சிலர் ஊரில் கெத்தாக திரிவதற்காக, சிலர் முந்தைய வருடங்களின் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக என வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் இருக்கும்.
போட்டி என்றால் வெற்றி தோல்வி இரண்டில் ஒன்று நிச்சயம். அன்று அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர் வசம் வெற்றி. அதனால் போட்டிகள் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்காய் அமையும்.
இத்தனை போட்டிகளையும் ஒரே நாளில் நடத்துவது என்பது கடினமான ஒன்று. அதனால் சில போட்டிகள் முன்பே திட்டமிட்டு. நடத்தப்படும். நாங்கள் ஊரில் இருந்து வந்ததால் பார்வையாளர்களாகவே இருந்தோம். போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே போட்டியில் கலந்து கொள்ளாத மற்றவர்கள் தங்கள் தனித் திறமையைக் காட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்ளாத ஆண் பெண் இளவட்டங்கள் தங்கள் நடன திறமைகளை அரங்கேற்று வார்கள். போட்டியை கண்டு களிப்போர் இடையிடையே தங்கள் பார்வையை மேடையின் மீது  செலுத்துவார்கள். சிலர் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட போட்டியிலும் பொதுவான போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.
அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. சிலர் விருப்பப்பட்ட போட்டியில் மட்டும் கலந்து கொள்வார்கள். சிலர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு இருப்பார்கள். பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர்கள் மீது கொண்ட நம்பிக்கையால் சில போட்டிகளில் அவர்களிடம் கேட்காமலேயே பெயர்களை கொடுத்துவிடுவார்கள் அதுபோன்றுதான் இவர்களும் சேர்க்கப்பட்டார்கள்.
என்னவள் கோலப்போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி மற்றும் குழு போட்டியான கயிறு இழுத்தல் ஆகியவற்றில் கலந்து கொண்டாள். அவளுக்கென மைதானத்தில் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரத்தோடு அவளை உற்சாகப்படுத்தினர். நானும் அவர்களோடு கலந்து கொண்டேன்.
கயிறு இழுத்தல் போட்டியில் அவள் குழு தோற்றுவிட்டது. ஆனால் அவளுக்கு கோலப் போட்டியில் மூன்றாவது பரிசும் இசை நாற்காலியில் முதல் பரிசும் கிடைத்தது. இசை என்பது நியூட்டனின் ஈர்ப்பு விசை போன்றது அது இளசுகள் தொடங்கி பெருசுகள் வரை அனைவரையும் ஈர்த்துவிடும். இறுதியாக பாட்டுப் போட்டி தொடங்கியது.
முதலாவதாக வந்த பெண் சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை, முத்து முத்து ஆசை, முடிந்து வைத்த ஆசை என்று தொடங்க அடுத்து வந்தவர் ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு ஊறுகாயா நான் இருக்கேன் என்று பாட ஆரவாரம் அதிகமானது. தொடரும், Edit box, 1 of,  2

Saturday, May 16, 2020

காதல் என்னும் அத்தியாயம் 5:

அவள் என் தலையில் கொட்டிய போது கைகளில் இருந்த வளையல் சத்தம் கொலுசின் ஓசைக்கு கோரஸாய் சேர்ந்துகொண்டது. மாலை நேர இளம் தென்றல், அருகிலே ஒளிவீசும் மின்னல், அதை நினைக்கும் போதே நான் பறக்கிறேன் விண்ணில், ஆஹா இன்னும் என்னென்ன அதிசயங்களோ பெண்ணில், இவை யாவும் எண்ணங்களால் எண்ணில் இனிக்குது நெஞ்சில்.
இவ்வாறு என் மனம் சேராத வார்த்தைகளை சேர்த்து, கோராத மாலைகளாய் கோர்த்து தீராத ஆசைகளை தீர்த்துக் கொண்டிருக்க அவள் பூ கரம் இல்லை, இல்லை பொன் கரம் என் கரத்திலிருந்து விருப்பின்றி விடைபெற்றது.
என் அக கேமராவில் அவளை அனிமேஷன் செய்து கொண்டிருந்த நான் இதை கவனிக்க தவறினேன். மீண்டும் அவளுடைய பொன் கரங்கள் என் தோளைப் பற்றி சிறிது இழுக்க 3d எபெக்ட் இல் இருந்த நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.
அவள் என்னை பார்த்தால் உனக்கு பேய் மாதிரி தெரிகிறதா? வேட்டைய புர அரண்மனைக்கு சென்று வந்த வடிவேலை போல, இப்படி உறைந்து போய் நின்று கொண்டு இருக்கிறாய் என்றாள்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை வாயாடி மேலே எதற்கு வந்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன் நான். உடனே அவள் ஒரு அழகான பையன் வந்திருப்பதாகவும், அவன் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அதான் பார்த்துட்டு போலாம் என்று வந்தேன் என்றாள்.
அவள் பேச்சில் அப்படியே கிராமத்து துடுக்கு அதை நான் ரசித்தாலும் பார்த்தாச்சு இல்ல போகலாம் என்றேன். போவாங்க, போவாங்க இந்தாங்க காப்பி என்றால். நான் எப்படி வாங்குவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அவள் என் கைகளைப் பிடித்து இந்தா பத்திரமாக பிடி என்று கொடுத்தாள். நான் வாங்கிக்கொண்ட உடன் அவள் கீழே இறங்கி சென்று விட்டாள் பொதுவாக பிடித்தவர்கள் கொடுத்த பொருள் இனிப்பை இமாலயன் ரேஞ்சுக்கு இன்க்ரீஸ் செய்யும். ஆனால் எனக்கு அருகில் அவள் இல்லாததால் அதிக சர்க்கரை உடைய காப்பியும் சற்று கசக்கத்தான் செய்தது.
காதலி போயிட்டா அடுத்து யாரு நண்பன் தானே? இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் phone னை எடுத்து ஹலோ என்றான். ஹாய் மச்சி எப்படி இருக்க என்றேன். நான் நல்லா இருக்கேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றான்.
நான் உடனே நீங்களா? என்றேன் அதற்கு அவன் ஆமாம் இனி நீ என்பது நீங்கள் தானே? என்றான் இப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் அவளையும் சேர்த்து சொல்கிறான் என்று.
உடனே நான் இன்னைக்கு, இன்னைக்கு என்று இழுக்க ஆரம்பிச்சிட்டாண்டா இனி off பண்ணவே மாட்டான் என்றான். நான் வந்த கோவத்தை அடக்கி கொரியரில் அவனுக்கு அனுப்பிவிட்டு வராத சிரிப்பை வர வைத்து சிரித்தேன்.
சரி விடு மச்சி உன் கோபம் எனக்கு புரிகிறது இன்று நடந்ததை கூறும். என்று மன்னன் போல் கேட்க நான் அமைச்சர் போல அடக்கமாய் நடந்ததை கூறினேன்.
அப்புறம் சொல்லிட்டியா என்றான் நான் மெதுவாக இல்லை, இல்லை என்றேன். உடனே அவன் அவள் கொடுத்த காபி இங்கு என்னிடம் வழிந்து கொண்டிருக்கிறது அங்கு இது அப்படியே வார்த்தைகளாக வழிந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றான்.
மச்சி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத பொண்ணுங்க மனசு வாடகை வீடு போல, எவன் எப்ப ரெண்டுக்கு வருவானே தெரியாது முந்திகிட்டா உனக்கு மோட்சம் இல்லையினா நீ போயிடுவ மோசம் என்று கூறிவிட்டு phone னை கட் செய்துவிட்டான்.
நான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தேன். என்ன சாருக்கு சாப்பாடு மேலே வரணுமா என்றாள் அக்கா. அதான் வந்துவிட்டேனே என்றேன்.
இரவு உணவு இட்லி உடன் சிக்கன் குருமா ஆனால் எனக்குத்தான் அதில் ஈடுபாடு இல்லை. மனம் முழுவதும் நண்பன் கூறியவையே ஓடிக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று இட்லிகளோடு எழுந்ததாக ஞாபகம். எல்லோரும் ஏன் என்று கேட்க ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து விட்டு அப்படியே போய் படுத்துக் கொண்டேன்.
மின்விசிறியின் செயற்கை காற்றையும் ஜனவரியின் கடும் குளிரையும் மீறி படுக்கையில் வெப்பம் என்னை வாட்டிக் கொண்டிருந்தது. நித்திரை தேவியோ நினைவுகள் மட்டும் போதும் இன்று உனக்கு கனவுகள் தேவை இல்லை என்றால்.
அப்பொழுதும் எனக்கு சித்திரையே அடி சித்திரையே ஏன் நித்திர போயிடுச்சு. இந்த பாழாப் போன காதல் என்ன பைத்தியம் ஆகிருச்சு என்று பாடத் தோன்றியது..
நேரம் நடுநிசியைய் எட்டியது நான் விழிமூடி தூக்கத்தை தேடினேன். இம்முறை நித்திரை தேவி என்மீது இரக்கம் கொண்டாள் நான் உறக்கம் கொண்டேன்.
அடுத்த நாள் காலை போகிப்பண்டிகை ஓடு அனைவருக்கும் விடிந்தது எல்லோரும் தங்கள் வீட்டில் பழையது எனக்கருதிய அனைத்தையும் நெருப்பிட்டு எரித்து போகியை கொண்டாடினர் எங்களுக்கும் அது சிறப்பாகவே அமைந்தது. அன்றும் விருந்து உபசரிப்பு நன்றாகவே இருந்தது. இரவு உணவு முடிந்தவுடன் வீட்டுப்பெண்கள் கதை பேச ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டாள் அதற்கு முடிவே கிடையாது. பக்கத்து வீட்டு மாமியின் ஆரம்பித்து எதிர் வீட்டு அக்கா, தூரத்து உறவுக்காரப் பெண் என்று நீண்டு  கொண்டே செல்லும்.
கூட்டத்தில் ஒருவர் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சாண்டி என்பார் அது அப்படியே யாருக்கு, எப்ப, எத்தனை குழந்தை, என்று மற்றவர்களிடமிருந்து கேள்விகளாய் தொடரும். பொதுவாக பெண்களின் பேச்சில் பலருடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும். இது சில நேரங்களில் கேட்பதற்கு இன்ட்ரஸ்ட் ஆக இருந்தாலும் பல நேரங்களில் அவர்களை திட்ட தோன்றும்.
இடையிடையே அவளையும் என்னையும் சேர்த்துவைத்து கிண்டல் செய்தார்கள். இருவருக்கும் வெட்கத்தைப் பாரேன் என்று அத்தையும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். எனக்கு அது உள்ளூர இனிப்பாய் இருந்தது அவளுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.
திடீரென்று அம்மா நாளைக்கு பொன்னியம்மன் கோயிலுக்கு போக வேண்டும் என்றார். அவருக்கு ஒரு வேண்டுதல் இருந்தது அது நிறைவேறும் வரை யாரிடமும் சொல்லக்கூடாது ரகசியமாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. பெரும் பொங்கல் அன்று பொன்னியம்மன் கோவிலில் பூஜை விமர்சையாக நடைபெறும் அம்மனுக்கு சேலை அணிவித்து பெண்கள் வேண்டிக் கொள்வது வழக்கம். இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது அத்தை எல்லோரும் சென்று தூங்குங்கள் என்று கூறிவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு வாசலில் கோலம் போட சென்றுவிட்டார். இரவில் ஏன் கோலம் என்று கேட்பவர்களுக்கு ஒருவேளை காலை எழுவதற்கு லேட்டாகி விட்டாள் முன்னேற்பாடாக இது போன்ற சில வேலைகளை இரவே செய்து விடுவார்கள்.
காலையில் அனைவரும் சீக்கிரமாகவே எழுந்து குளித்துவிட்டு புத்தாடைகளை அணிந்து கொண்டோம். பெண்கள் ஒவ்வொருவராக கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்து கொண்டு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் மீண்டும் மீண்டும் அதனை சரி பார்த்துக் கொண்டனர். பொதுவாக பெண்கள் எவ்வளவு அழகான ஆடைகளை அணிந்திருந்தாலும் அவர்களுடைய கவனம் மற்றவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளிளே இருக்கும். அடுத்த முறை அதை வாங்குவதற்கு கணவனின் சம்பளத்திலிருந்து ஒரு பட்ஜெட்டை ஒதுக்கி விடுவார்கள். குடும்ப வாழ்வில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் பெண்கள் தானே? நான் பெண்களைப் பற்றி பேசிக்கொண்டே பொங்கலை மறந்துவிட்டேன்.
வாங்க பொங்கல் வைக்கும் இடத்திற்கு செல்வோம் வீட்டின் முன்பு இரண்டு அடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன இரண்டு அடுப்புகளிலும் புது பானைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பானையில் உப்பு கலந்த பச்சரிசிப் பொங்கலும் மற்றொரு பானையில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெள்ளம் போன்றவை கலந்த இனிப்பு பொங்கலும் தயாராகிக்கொண்டிருந்தன.
பொங்கல் நன்றாக பொங்கி பானையின் மேல் வழியும்போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என்றோம். அதன்பிறகு அனைவரும் பொங்கலை சாப்பிட்டோம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தோம். மதிய உணவை முடித்துவிட்டு அனைவரும் ஒரு குட்டித்தூக்கம் போட்டோம். மாலை எழுந்து அனைவரும் கோயிலுக்கு கிளம்பினோம். பொன்னியம்மன் கோவில் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில் இருந்தது.
அனைவரும் நடந்தே செல்வதாக முடிவு செய்தோம். பெரும்பாலும் வெளியில் செல்லும் போதெல்லாம் அக்கா என் கையை பிடித்து அழைத்துச் செல்வதே வழக்கம். இம்முறை அவள் என் கையை பிடித்துக் கொண்டாள் இருவரும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம் என் மனம் பூஞ்சோலையில் பறந்து கொண்டிருந்தது. வழியில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க ஒரு கடையில் நின்றோம். நாங்கள் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்தோம்.
அப்பொழுதும் அவள் என் கைகளை விடாமல். பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். சாலையின் ஓரம் ஒரு இணை பிரியா ஜோடி என்று அக்கா கிண்டல் செய்ய சுத்தி போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பருன்னு ஊருக்குள்ள பேச்சு. வயலுக்கு போற சனம் எல்லாம் பச்ச நெல்லாக நம்ம பேர நடவு செய்த யா. சந்தையில கூடுர கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம நம்ம சேதி வாங்கி போகுதய்யா என்ற பாடல் அந்த கடையில் இருந்த ரேடியோவில் பாடிக் கொண்டிருந்தது.
உடனே அக்கா what a timing song என்றாள். வெட்கத்தில் அவள் கண்ணங்கள் சிவந்து இருக்க வேண்டும். அது அவளுடைய கை அசைவிலும் அழுத்தத்திலும் தெரிந்தது. தொடரும், Edit box, 1 of,  2

Sunday, May 10, 2020

காதல் என்னும் அத்தியாயம் 4:

நண்பனிடம் விடைபெற்று பிரியாமல் பிரிந்து சென்றேன். இரவு phone செய்து அவன் ஊருக்கு கிளம்பியதை உறுதி செய்து கொண்டேன்.
வீட்டில் இரவு உணவு முடிந்தவுடன் ஊருக்கு செல்வது குறித்து அனைவரும் பேசி காலையில் செல்வது என ஒரு முடிவுக்கு வந்தோம். ஊருக்கு சென்று குறைந்தது நான்கு நாட்களாவது தங்க வேண்டி இருந்ததால் அதற்கான ஆயத்த பணிகளை அக்காவும் அம்மாவும் செய்து கொண்டிருந்தனர்.
எட்டு வருடம் கழித்து ஊருக்கு செல்வதால் உறவினர்களுக்கும் புத்தாடைகள் எடுக்கப்பட்டு இருந்தது அதனையும் பத்திரமாக எடுத்து வைக்கச் சொல்லி அம்மா அக்காவிடம் கூறினார். கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் தூங்க சென்று விட்டோம் ஆனால் எனக்கு மட்டும் தூக்கமே வரவில்லை. உருண்டு புரண்டு படுத்து பார்த்தேன் தூக்கம் வரவில்லை.
மனம் எதையோ யாரையோ நினைத்துக் கொண்டிருந்தது. பலரின் தனிமையை இனிமையாக்கும் அருமருந்து இசை. நான் என் சைனா செட்டில் headphone னை மாட்டி அதை காதுகளுக்கு பொருத்தினேன். அது குருவாயூரப்பா, குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி என்ற பாடலை ஒலித்தது. அப்பாடலை ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு எத்தனை தடவை கேட்டேன் என்று தெரியவில்லை காலையில் அக்கா வந்து எழுப்பிய போது தான் தெரியும் நான் தூங்கிப் போய் இருந்தேன் என்பது.
அனைவரும் குளித்துவிட்டு காலை டிபனை முடித்துக் கொண்டு கிளம்பினோம் திடீரென்று வெளியிலிருந்து வந்த அப்பா நாம் மகிழுந்தில் செல்கிறோம் என்றார். மகிழுந்து என்றவுடன் எனக்கும் அக்காவுக்கும் ஒரே மகிழ்ச்சி அம்மா மட்டும் பேருந்தில் போகலாமே எதற்கு செலவு என்றால்.
அப்பா ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். மகிழ்வுந்தில் எந்த மாற்றமும் இல்லாமல் பயணம் தொடங்கியது. பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் அத்தையிடம் இருந்து phone வந்தது. எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார் நான் அதையே அப்பாவிடம் கேட்டு முக்கால் மணி நேரம் ஆகும் என்று கூறிவிட்டு phone னை கட் செய்து விட்டேன்.
மகிழுந்து வீட்டின் அருகில் சென்று நின்றவுடன் என் தேவதை குடியிருந்த கோயில் வந்து எங்களை வரவேற்றது. என்னது கோயிலா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அதாங்க என் அத்தையை சொன்னேன். சிறிது நேரத்தில் வீட்டின் அருகில் பெரும் கூட்டமே கூடிவிட்டது. உறவினர், அண்டைவீட்டார், பக்கத்து தெரு வினர் என்று அனைவரும் வந்து நலம் விசாரித்து சென்றனர்.
கூட்டத்தில் என் நிலைமை படுமோசம் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று பலரும் என்னிடம் அவர்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அதில் சிலர் நான் யார் என்று கேட்டு என்னை test செய்து கொண்டார்கள். பெரும்பாலும் என்னைப் போன்றவர்கள் இதனை விரும்புவதில்லை.
இதுபோன்ற நேரங்களில் கோபம் தான் வரும் பாவம்! இது அவர்களுக்கு எப்படி புரியும். எல்லா பார்வையற்றோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவர்கள் எங்களுக்கு தந்த வரவேற்பு நாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தது போன்ற பிம்பத்தை எனக்கு ஏற்படுத்தியது. உண்மை தான் தமிழகத்தின் பல கிராமங்களில் இருக்கும் சிலருக்கு சென்னையும் வெளிநாடு போன்றதுதான். இன்று வரை அவர்களுக்கு சென்னை என்பது கனவாகவே இருக்கிறது. சிலருடைய பிள்ளைகள் மேற்படிப்பிற்காக சென்னைக்கு வந்து இருக்கலாம், சில பெண்களுடைய கணவர்கள் கட்டுமான பணிகளுக்காக சென்னைக்கு வந்து இருக்கலாம், சிலர் குடும்பத்தோடு இடம் பெயர்ந்திருக்கலாம் இவ்வாறு வந்தவர்களில் சிலருடைய உறவினர்கள் அவர்களை பார்க்க வந்து இருக்கலாம்.
பலர் வருவதில்லை காரணம் அவர்களுடைய ஏழ்மை. இதனைப் படித்துக் கொண்டிருக்கும் சிலர் மேற்கூறியவற்றை மறுக்கலாம் எப்படியாக இருப்பினும் அதுதான் நிதர்சனமான உண்மை.
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெழும்பு, கிராமங்கள் சுயராஜ்யம் பெற வேண்டும் என்று தேசத்தந்தை காந்தியடிகள் போன்றவர்கள் கூறியிருக்கின்றார்கள். தற்பொழுது நம்மை ஆண்டு வரும் பல தந்தைகள் கிராமங்கள் என்பதையே மறந்து விட்டனர். சரி, சரி கொஞ்சம் over ராக பொங்கி விட்டேன். சமூகத்தை விடுவோம் என் சங்கதிக்கு வருவோம். நலம் விசாரிக்க வந்த அனைவரும் சென்றபிறகு என் தாத்தா என்னை அழைத்து அவர் அமர்ந்திருந்த கயிற்றுக்கட்டிலில் அருகில் அமர்த்திக் கொண்டார். என் கையை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தார் அவர் அழுவதை பார்த்து மற்றவர்களும் அழுதனர் என் கண்கள் கூட ஓரிரு துளிகளை உதித்தது.
அப்பாவுடன் பிறந்த அனைவருக்கும் பெண்குழந்தைகள் மட்டுமே நான் ஒருவன் மட்டுமே அனைவருக்கும் ஆண் குழந்தை அதனால் அனைவருக்கும் என் மீது பாசம் அதிகம். தாத்தாவின் பாசத்திற்கு அதுவும் ஒரு காரணம் உறவு புதுப்பிக்கப்பட்டது தாத்தாவிற்கு மகிழ்ச்சி.
என் கிராமத்தையும் தாத்தாவையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். எங்கள் கிராமத்தில் மரியாதைக்குரிய நான்கைந்து குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. ஊரில் உள்ள நாட்டாமை களில் தாத்தாவும் ஒருவர்.
கிராமம் பல கட்டுப்பாடுகளை கொண்டது கலப்பு திருமணம் ஏற்றுக்கொள்ளப்படாது. சாதி என்பது இங்குள்ளவர்களின் உதிரத்தில் உதித்தது காதல் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படாது அதுவும் வேற்று சாதியினர் என்றால் சொல்லவே தேவையில்லை.
தவறு செய்பவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, அபராதமாக ஒரு தொகையை விதிப்பது போன்றவை தண்டனை முறைகளாக இருக்கின்றன. சில தவறுகளுக்கு இரண்டு தண்டனைகளும் ஒன்றாக விதிக்கப்படலாம்.
மரத்தடியில் அமர்ந்து தாத்தா கூறும் தீர்ப்புகளை கேட்பதற்கு ஊர் மக்கள் ஆர்வமுடன் கூடுவதை பெற்றோர் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் நான் இது போன்ற விஷயங்களை விரும்புவதில்லை.
ஆனால் என்னுடைய காதலுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதில் மகிழ்ச்சி. சரி வீட்டிற்கு வருவோம் வீட்டில் சென்டிமெண்ட் முடிந்து மதிய உணவும் அறுசுவையோடு முடிந்தது.
மாலை 5 மணிக்கு நான் மொட்டை மாடிக்கு சென்றேன். என் நண்பனை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அவனுக்கு நாட் ரீச்சபிள் என்று வரும்பொழுதே என்னை ஒரு கொலுசின் ஓசை ரீச் செய்து கொண்டிருந்தது. அவள்தான், அவளேதான் என் அருகில் வந்து என் கைவிரல்களை பிடித்துக்கொண்டே நல்லா இருக்கியா என்றாள்.
நான் பதிலேதும் கூறாமல் மௌனமாய் என் போனை எடுத்து அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே என்ற பாடலை சத்தமாக ஓட விட்டேன். அதற்கு பரிசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது. தொடரும்

Monday, May 4, 2020

காதல் என்னும் அத்தியாயம் 3:

ஊருக்கு போறோம் என்ற உற்சாக டானிக் என் உடல் முழுவதும் ஹார்மோன் ஆய் பறவை அசட்டுத்தனமாய் நான் கத்திவிட்டேன்.
அது பக்கத்தில் படித்துக்கொண்டிருந்த என் நண்பனை disturb செய்துவிட்டது. உடனே அவன் டென்ஷனாக கத்தினான் அவன் கத்தலுக்கும் காரணம் இருந்தது.
அப்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது அதற்குத்தான் அவன் அவ்வளவு sincere  ராக படித்துக்கொண்டிருந்தான்.
உடனே அவனிடம் சாரி கேட்டுவிட்டு நடந்ததைக் கூறினேன். அதற்கு சரி, சரி மூடிக்கிட்டு படி நாளைக்கு exam எழுதணும் இல்ல என்று கூறிவிட்டு அவன் வேலையை தொடங்கி விட்டான்.
நானும் பரீட்சைக்கு படிக்க தொடங்கினேன். என்னடா இவன் படிக்கிறேன், பரிச்சை எழுதுகிறேன் என்றுகூறிவிட்டு இவனை பற்றியும் இவன் பள்ளியைப் பற்றியும் எதுவும் கூறவில்லையே என்று நீங்கள் think செய்வது எனக்கு தெரிகிறது.
முதலில் என்னை பற்றி; நான் இரண்டாம் வகுப்பு வரை mahalakshmi matric higher secondary School ஹில் படித்துக்கொண்டிருந்தேன்.
அந்தப் பள்ளியில் சில நேரங்களில் வகுப்புகள் மரத்தடியில் நடைபெறும். எங்கள் பள்ளியில் ஒரு சிறிய பிளாக்போர்டு இருக்கும் அந்த போர்டை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அன்று அந்த போர்டு மரத்தடிக்கு கொண்டுவரப்பட்டது அந்த வகுப்பு ஆசிரியர் வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் நானும் என் வகுப்புத் தோழர்களும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது ஒருவன் தெரியாமல் அந்த போர்டின் மீது மோதி விட்டான் உடனே அந்த போர்டு சரிந்து என் மேல் விழுந்தது. அதனால் என் தலையில் பலமாக அடிபட்டது உடனே ஹாஸ்பிடலுக்கு சென்று ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டேன்.
அடிக்கடி தலைவலி மட்டும் இருந்து வந்தது நாளாக நாளாக பார்வை மங்குவது ஆக தோன்றியது. என்னால் போர்டில் எழுதி போடுவதை பார்த்து எழுதமுடியவில்லை.
இதைப்பற்றி என் பேரன்ட்ஸ் இடம் கூறினேன்மீண்டும் டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள் என்னை பரிசோதித்த டாக்டர் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் பார்வை குறைந்து கொண்டு வருவதாகவும் கூறினார்.
ட்ரீட்மெண்ட் ஐப் பற்றி என் பெற்றோர் கேட்டபோது கொஞ்சம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் ஆனால் என்னால் 100% கேரண்டீ கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.
இதற்கு மேல் அந்தப் பள்ளியில் என்னால் தொடர முடியாது என்பதை அறிந்து கொண்ட எனது வகுப்பு ஆசிரியர்கள்சென்னை பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதாகவும் என்னை அங்கு சேர்த்து விட்டால் நான் நன்றாக படித்து நான் நினைத்ததை achieve பண்ண முடியும் என்று கூறினார்கள்.
ஆசிரியர்களின் அறிவுரையின்படி அடுத்தநாள்பூந்தமல்லிக்கு சென்றோம் எனது ஆசிரியர் இருவர் என் பெற்றோருடன் வந்தனர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் என்னைப்பற்றிகூறியவுடன் அவர்கள் மகிழ்ச்சியோடு என்னிடம் சில கேள்விகளை கேட்டு விட்டு இரண்டாம் வகுப்பில் தொடரலாம் என்று கூறினர்.
அங்கிருந்த ஆசிரியர்கள் எனது பேரன் சுக்கு அறிவுரை கூறி என்னை ஹாஸ்டலில் விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். பள்ளியில் இருந்து என் வீடு கொஞ்சம் பக்கம் இருந்ததால் வார வாரம் நான் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன்இவ்வாறு நான் வீட்டிற்கு சென்று வருவது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.
பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது இப்பள்ளியில் நான் படிக்கும் பொழுதுபள்ளி வளாகத்தில் பார்வையற்றோர் தொழில் பயிற்சி மையம், பார்வையற்றோருக்கான பெண்கள் மறுவாழ்வு இல்லம், வட்டார பிரெய்லி அச்சகம், இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம், பார்வையற்றோருக்கு கற்பிக்கும் ஆசிரியர் பட்டய பயிற்சி மையம் போன்ற அரசுசார் நிறுவன மையங்கள் செயல்பட்டு வந்தன.
இப்பொழுது அப்பள்ளியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதாக நண்பர்கள் கூற கேள்விப்பட்டேன். நான் படிக்கும் பொழுது விடுதியும் பள்ளியும் வெவ்வேறு இடத்தில் இருக்கும் ஆனால் இப்பொழுது விடுதி பள்ளிக்கு அருகிலேயே கட்டப் பட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டேன்.
நான் ஒருமுறை பள்ளிக்குச் சென்றபோது அங்கு மாணவர்கள் விளையாடுவதற்கு சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. Ok ok வரலாறு நீண்டுகொண்டே செல்கிறது இப்பொழுது தேர்வு கதைக்கு வந்துவிடுவோம் தேர்வு வெற்றிகரமாக முடிந்தது நான் ஓரளவு நன்றாக எழுதி இருந்தேன். என் நண்பன் வழக்கம்போல நன்றாக எழுதி இருப்பான் நான் காலையிலேயே என் வீட்டிற்கு போன் செய்து வர சொல்லி இருந்ததால் மதியமே என்னை அழைத்து செல்ல என்னுடைய அக்கா வந்து இருந்தாள்.
என் நண்பன் இரவு தான் ஊருக்கு செல்வேன் என்று முன்பே என்னிடம் கூறி இருந்தான். அவனிடம் மச்சி ஹேப்பி பொங்கல் டா வீட்டுக்கு கிளம்புறேன் என்றேன். ஓகே மச்சி சேம் டு யு டா ஆளுகிட்ட ஓவரா பொங்கி டாத உடம்பு தாங்காது டைம் பார்த்து லவ்வ சொல்லிடு என்றான் நான் ஓகே மச்சி என்று கூறிவிட்டு கிளம்பினேன். தொடரும்