Friday, April 24, 2020
காதல் எனும் அத்தியாயம்1
காதல் என்னும் அத்தியாயம் 1: காதல் சொல்லும்பொதே சுவையானது; அது எனக்கும் அனுபவக் கதையானது.அது ஒரு அழகிய கனாக்காலம்; அப்பொழுது நான் பத்தாவது படித்து கொண்டு இருந்தேன்.எனக்கு friends னு சொல்ல நாலு பேரு அதுள, best னு சொல்ல ஒருத்தன்.அவர்களின் கதைகளின் கதைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்களாம்.என் நெருங்கிய நண்பனிடம் எனது அத்தை பெணைப் பற்றி ஒருநாள் இரவு தூங்கும்போது சொல்லிக்கொண்டிருந்தேன்.அவனும் ஆர்வமாகக்க் கேட்டுக்கொண்டிருந்தான் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவனை பாடாய்ப் படுத்திவிட்டேன்.அதன் பிறகு இருவரும் தூங்கிவிட்டோம். காலையில ஒரு ஏழு மணி இருக்கும் என்னுடைய அலைபேசி அலறியது; phone பண்ணது யாருன்னா என்னுடைய அக்கா நான் அதை எடுத்துக்கிட்டு தனியா ரூமை விட்டு வெளியே போயிட்டேன் ஒரு அரை மணி நேரம் கழித்து பேசிவிட்டு அறைக்குள் வந்தேன். நான் அறைக்குள் வந்தவுடன் எனது நண்பன்அந்தப் பொன்னு தானுநெனச்சுக் கிட்டு என்னை பேசவிடாமல் கலாய்த்து தள்ளிவிட்டான்.இல்லடா அக்கா கிட்டஎன்றேன் அவன் மச்சி நீ யோகக்காரண்டா அதுக்குள்ள அவுங்க அக்காவையும் correct பண்ணிட்ட என்றான்.உடனே நான் அவனை அடிக்கத் துரத்தினேன் அவன் sorry மச்சி school ளுக்கு time ஆச்சுவா குலிக்கப் போகளாம் என்றான்.கொஞ்ச நேரம் கழிச்சு இரண்டு பேரும் குளிக்க போயிட்டோம் அதுக்கப்புறம் எப்ப பார்த்தாலும் அந்த பொண்ண பத்தி அவன் கிட்ட மட்டும் தான் பேசுவேன் அவனோ நான் பேசும்போதெல்லாம் வேற வழி இல்லாம கேட்டுக்கொண் டிருப்பான்.நானும் என் family யும் Chennai யில இருக்கோம். அவளும் அவ family யும் எங்க சொந்த ஊருல இருக்காங்க. நாங்க எங்க ஊர விட்டு வந்து எட்டு வருடம் ஆகுது. அத்தைக்கும் எங்களுக்கும் ஒரு சின்ன நிலத்தகராறு அதுல கோவிச்சுக்கிட்டு அப்பா சென்னைக்கு வந்துட்டாரு எங்களையும் ஊர் பக்கமே கூட்டிக்கொண்டே போகல, ஒரு நாள் அந்தப் பொண்ணு எனக்கு phone பண்ணுச்சு அந்த நாள் எனக்கு சரியாக நினைவில் இல்லை ஆனா பொங்கல் நெருக்கத்தில் தான் phone பண்ணுச்சுனு மட்டும் தெரியும்.நான் phone attend பண்ணி காதில் வச்ச உடனே _ ஹலோ மென்மையாக ஒரு குரல் அதுவும் பெண்ணின் குரல் நான் யார் என்று யோசிப்பதற்குள் மறுபடியும் ஒருமுறை ஹலோ என்று அந்தப் பெண்ணின் குரல் மென்மையாக என் காதை தழுவியது அந்தப் பெண் நல்லா இருக்கியா என்று என் பெயரைச் சொல்லி கேட்டாள். இதுவரை இ இவ்வளவு மென்மையாக எந்தப் பெண்ணின் குரலையும் நான் போனில் கேட்டதில்லை மது குடித்தால் மதி மயங்குவது போல, அந்த மாதுவின் குரல் எனது மனதை மயக்கியது. அப்புறம் என்னை ஆசுவாசம் செய்து கொண்டு பதிலுக்கு நீங்க என்று கேட்டேன். தொடரும்
Labels:
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment