Monday, July 13, 2020

காதல் என்னும் அத்தியாயம் 10

இரவு உணவும், இனிய நினைவும், எதிர்பார்த்த கனவும் என்னை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது. வாழ்க்கை என்னும் கடலை சேர காதல் என்னும் கப்பலில் பயணம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.
கைப்பேசியில் அவள் வாய்ப் பேச்சை கேட்க காத்திருந்த நாட்களெல்லாம் சொல்ல நேரம் காணாது! அந்த சொகம் எப்போதும் மாறாது. இப்படியே நாள்தோறும் என் பேச்சை அவள் கேட்க, அவள் பேச்சை நான் கேட்க என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
இருவருக்கும் ஆசைகள் பேராசைகளாக, கனவுகள் பல, கற்பனைகளாக வளர்ந்து கொண்டிருந்தன. காதலிப்பவர்கள் phone னில் மணிக்கணக்காய் பேசுவதை பார்த்து உடன் இருப்பவர்கள் அப்படி என்னதான் ரகசியம் பேசுவார்களோ? என்று சலித்துக் கொள்வதும் உண்டு.
பொதுவாக, love பண்றவங்க dictionary இல் அப்புறம், சொல்லு, பேசு, நீ பேசு, என்ன பேசுறது, என்கிட்ட மட்டும் உனக்கு என்ன பேசறதுன்னு தெரியாது, உனக்கு மட்டும், நல்லா இருக்கியா, சாப்பிட்டியா, வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா, என்ன பண்ணிக்கிட்டு இருந்த, ஏன் போன் எடுக்கல, என்ன விட உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை போன்ற சில வார்த்தைகளும், சில வாக்கியங்களும் ad செய்யப்பட்டிருக்கும்.
இதனைத் தாண்டி அவர்களுடைய மொத்த இரகசியத்தை நம்மால் அறிய முடியாது. ஆனால், முத்த ரகசியம் அனைவரும் அறிந்ததே. அதான் சினிமாவுல கூட காட்டுகிறார்களே.
சில பாக்கியசாலி களுக்கு அது கேட்டவுடன் கிடைத்துவிடும். சில அதிர்ஷ்டசாலி களுக்கு அது கேட்காமலேயே கிடைத்துவிடும். என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலி களுக்கு அது திருமணத்திற்கு பிறகு என மறுக்கப்படும்.
சில நேரங்களில் முத்தம் மொத்த பேலன்ஸ் தீரும் வரையிலும் கிடைக்காது. கேட்டது கேட்டவுடன் கிடைத்துவிட்டால் கேட்பதில் தான் என்ன சுகம்? கேட்டது கிடைப்பதில் தான் என்ன சுகம்?. தாமதமாய் கிடைப்பதில் தான் தாராளம் ஏராளமாய் இருக்கும்.
அவளிடம் ஆயுள் கைதியான நான் இடையிடையே வந்த நண்பனின் அறிவுரைகளை அலட்சிய படுத்தினேன். சுதந்திரமான நட்பு சிறையில் இருந்து விடுபட்டு சுகமான காதல் சிறையில் அடைப்பட்டதால் பாதை தடம் மாறி, படிப்பு உருமாறி, மனம் ஒரு மாரி ஆனது.
அதன் விளைவு பத்தாம் வகுப்பு result இல் தெரிந்தது. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. pass ஆயிட்டேன்; ஆனா 54 சதவீதம் மார்க் மட்டுமே எடுக்க முடிந்தது.
நண்பன் பள்ளியில் இரண்டாவது மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். அவனுக்கு முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறவில்லை என்ற வருத்தம். ஆனால், எனக்கு அந்த வருத்தம் இல்லை. ஏனென்றால், அவன் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று விடுவான் என்று எனக்கு தெரியும்.
நான் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறவில்லை என்றால் உடனே டல்லாகிவிடுவேன். விளையாட்டுல தோத்துட்டா கூட என் மனம் அதை ஏற்காது. அந்த நேரங்களில் நண்பனுடைய advice ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தரும்.
பதினொன்றாம் வகுப்பு முழுவதும் என்னை என் போக்கில் விட்டுவிட்டான். அந்த ஆண்டின் இறுதியில் என்னை அழைத்து அவன் செய்த advice வழக்கமானதாக தெரியவில்லை. மாறாக வாழ்க்கையின் யதார்த்தத்தை எனக்கு புரிய வைத்தது. ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடியும் என்பது முதுமொழி. ஈன்றதை இழந்துவிடாமல் இருக்க இயன்றதை செய்ய வேண்டும் என்பது புதுமொழி.
வாழ்க்கை என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. நாம் அனைத்திலும் சரிநிகர் கவனம் செலுத்த வேண்டும். அதில் பாரபட்சம் காட்டினாள் பாதை மாறிவிடும். கடலெனும் வாழ்க்கைப் பயணத்தில் காதல் என்னும் கப்பலுக்கு முக்கியமானவை இரண்டு.
ஒன்று கடலில் கப்பலை தாங்கி நிற்கும் நங்கூரம். மற்றொன்று பயணத்தில் வழிகாட்டும் கலங்கரை விளக்கம். உன்னைப் பொறுத்தவரை நீ நங்கூரம், அவள் கலங்கரை விளக்கம். என்னைப்பொறுத்தவரை நம்மைப் போன்று middle class குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு நங்கூரம், அதன்மூலம் கிடைக்கும் வேலை கலங்கரை விளக்கம் என்று கடைசியாய் அவன் கூறிய வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கை விதைகளை விதைத்தது.
அன்று அவன் விதைத்த விதை இன்று என் கதையை நானே எழுதும் அளவிற்கு மரமாய் என்னை வளர்த்து இருக்கிறது. நான் பன்னிரண்டாம் வகுப்பில் 82 சதவீத மதிப்பெண்ணுடன் ஐந்தாவது மாணவனாக தேர்ச்சி பெற்றேன். எல்லோரும் எதிர்பார்த்ததை போல என் நண்பன் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். எல்லோருடைய பாராட்டும் நண்பனுக்கு கிடைக்க, நண்பனுடைய பாராட்டு எனக்கு கிடைத்தது.
அதன் பிறகு மனதில் பாரத்தோடும், கண்ணில் ஈரத்தோடும் நண்பர்கள் கூட்டம் பிரிந்தது. கோடை விடுமுறையில் காதல் பயணம் காலம், நேரம் இன்றி தொடர்ந்தது. ஒரு நாள் அவள் என்னிடம் கேட்ட கேள்வி ஏற்கனவே பலர் என்னிடமும் என் பெற்றோரிடமும் கேட்டது.
அப்போதெல்லாம் தயக்கமின்றி பதிலளித்த எனக்கு திடீரென்று அவள் கேட்டவுடன் ஒரு அதிர்ச்சி. சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா குழந்தை ஊனமாகப் பிறக்குமா? என்பதுதான் அவளுடைய கேள்வி.
ஏன்  திடீர்னு  இந்த கேள்வி என்று கேட்டேன். ஒன்னுமில்ல அம்மாகிட்ட ஒருத்தவங்க பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்கதான் இதைப்பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதனாலதான் கேட்டேன்.
எல்லோருடைய குழந்தைகளும் அப்படிப் பிறப்பதில்லை. சிலருடைய குழந்தைகள் அவ்வாறு பிறக்கின்றனர். என்று விளக்கினேன். 
இதனைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது உண்மைதான் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தை ஏதோ ஒரு வகை ஊனத்தோடு பிறக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எல்லோருடைய குழந்தையும் அப்படி தான் பிறக்கும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. என்னுடைய பெற்றோரைப் போன்ற துரதிர்ஷ்டசாலி களுக்கு அவ்வாறு நடக்கலாம். 
அதன் பிறகு எப்பொழுதெல்லாம் இருவரும் பேசும்போதெல்லாம் இதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. என்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சி செய்தேன். அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. இதைப்பற்றி என் பெற்றோரிடமும் பேசினேன். முதலில் அவர்களுக்கு அதிர்ச்சி ஏனென்றால் முதன்முதலில் எங்கள் காதல் விஷயத்தை அவர்கள் கேள்வி படுகிறார்கள். அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு அவர்கள் கூறியது இதற்குத்தான் தாத்தா கேட்கும் பொழுதே நாங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினோம். இப்பொழுதே இந்த விஷயத்திலிருந்து வெளி வர முயற்சி செய் என்று கூறி விட்டார்கள்.
இந்த சோகத்திலிருந்து நான் வெளிவருவதற்குள் கல்லூரியில் சேரும் நாள் வந்தது. நானும் என் நண்பனும் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் application போட்டிருந்தோம். இருவருக்கும் ஒரே department கிடைத்தது. கல்லூரியில் சேர்ந்தவுடன் நண்பனிடம் இதைப்பற்றி கூறினேன்.
கடைசியாக ஒரு முறை அவளிடம் பேசி பார் என்றான். நான் அவளுக்கு கால் செய்து பேசினேன். எனக்கு எல்லாமே புரியுது எனக்கு நீ இப்படி இருக்கிறது பிரச்சனை இல்லை. ஆனால், நம்ம குழந்தை ஊனமா பிறந்தா அதை ஏத்துக்கிற பக்குவம் உனக்கு இருக்கலாம். ஆனால், எனக்கு இல்லை. என்னை மன்னித்துவிடு எனக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள்.
என்னால் முடிந்தவரை அழுதேன். உன் சோகம் தீரும் வரை அழு. அழுகை ஒன்றுதான் உன் வலிக்கு நிவாரணம். என்று கூறி என் அழுகைக்கும் ஆதரவாய் நண்பன் இருந்தான்.
நாட்கள் கடந்தன என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. மறுபடியும் நண்பன் என்னிடம் பேசினான். உனக்கு பிடித்த ஒரு விஷயத்தில் முழு கவனத்தையும் செலுத்து. அது ஒன்றே நீ இயல்பு நிலைக்கு திரும்ப ஒரே வழி.
உனக்கு cricket ரொம்ப பிடிக்கும் இல்ல? college time முடிந்தவுடன் cricket விளையாடு. நானும் உன்னோடு வந்து விளையாடுகிறேன். அது உனக்கு practice சுக்கும் உதவும். டீம்ல நல்லா perform பண்ணலாம் என்றான்.
எனக்கும் அது நல்ல யோசனையாக தோன்றியது. அதற்கு கிடைத்த பரிசு நான் இப்பொழுது மாவட்ட அளவிலான ஒரு டீமுக்கு கேப்டனாக இருக்கிறேன்.
நான் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர நீண்ட நாள் ஆனது. அதன்பிறகு என் வாழ்க்கையின் நங்கூரமாக படிப்பு மாறியது. வழிகாட்டியான கலங்கரை விளக்கமாக நண்பன் இன்று வரை தொடர்கிறான். இதற்கு மேலும் தொடர்வான்.
அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்று மட்டும்தான் நமக்கு நாம் விரும்பிய ஒன்று கிடைக்கவில்லை என்றாள், அதைவிட best ஆன ஒன்று கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். so எதற்கும் கவலை வேண்டாம். be happy. முற்றும்.

இதுவரை இந்த பயணத்தில் என்னோடு தொடர்ந்து பயணித்த வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி. சிலருடைய நலன் கருதி யாருடைய பெயரும் இப்பயணத்தில் இடம் பெறவில்லை.., Edit box, 1 of,  2, Edit,  box

Friday, June 26, 2020

காதல் என்னும் அத்தியாயம் 9

மனதிற்குள் அவளை திட்டிய நான் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நான் என்ன நினைக்கிறேன் என்று உனக்கு தெரியாதா? என்றேன். தெரியும் ஆனால், என்று அவள் இழுத்தாள். வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தம் என்னை ஏதோ செய்தது.
மனம் பதறிப்போய் பலவற்றை யோசிக்க இதயம் இக்கணமே துடிப்பை நிறுத்தி விடவா? என்றது. மறுகணமே முடிவை மாற்றிக்கொண்டு இல்லை, இல்லை நான் துடிப்பதே அவளுக்காக தான் அவள் சொல்லட்டும் துடிக்கவா அல்லது துடிப்பை துண்டிக்க வா என்று.
என்று தனக்குள்ளே பேசிக் கொண்டது. மேலும் என் இதயத்தை இன்னலுக்கு உள்ளாக்க விரும்பாமல் நானே தொடர்ந்தேன். தாத்தா கூறியது நடந்தால்அது தான் இந்த ஜென்மத்தில் நான் செய்த பாக்கியம் என்றேன்.
என்ன உனக்கு அவ்வளவு பிடிக்குமா? என்று அவள் உதட்டில் இருந்து உதிர்த்த வார்த்தைகள் எனக்குள்ளே ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்தியது.
அம்மா, அக்கா ஆகிய இருவருக்கு பிறகு எனக்கு ரொம்ப பிடித்த பெண் நீதான். காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது.
காரணமே இல்லாமல் வருவதற்குப் பெயர் தான் காதல் என்றால் இதுக்கும் அதுதான் பேரு. அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நெருக்கத்தொடு உருக்கம், பேசும் நேரம் தவறினால் தவிப்பு, நெஞ்சமெல்லாம் அதே நினைப்பு இவை யாவும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கிடைப்பது.
அந்த ஒருவர் பெற்ற தாய், பேணி வளர்க்கும் தந்தை, உடன்பிறப்பு, உற்றார் உறவினர், உயிர் கொடுக்கும் நட்பு இப்படி யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் தாய் தனக்கு கிடைக்காத ஒன்றை கூட தன் குழந்தைக்கு முழுமையாக கொடுப்பவள்.
தந்தையும் அதற்கு சளைத்தவரல்ல. இருப்பினும் தாய் முதன்மை பெறுகிறார். தந்தை கொடுக்கும் ஒரு அணுவை தனக்குள் வாங்கி அதனை அணுகுண்டு ஆக்கி அடைகாத்து உடல் கொடுத்து உயிர் கொடுத்து உலகிற்கு தருவிக்கும் தாய் முதன்மை பெறுவதில் தவறு ஒன்றும் இல்லை அல்லவா?.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். என்னை பொருத்தவரை மாதா, பிதா, நட்பு, தாரம் அதாவது மனைவி என்ற வரிசையே சரியானது. இந்த வரிசையில் நான் தாயின் உருவத்தில் தெய்வத்தையும் தந்தையின் அறிவில் ஆசானையும் காண்பதால் குருவும் தெய்வமும் தவிர்க்க படவில்லை முதன்மை படுத்தப்படுகிறார்கள்.
கண்ணதாசன் வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, என்று கூறிவிட்டு கடைசி வரை யாரோ? என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார்.
அதற்கு என்னிடம் உள்ள பதில் நட்பு. உண்மையான நட்பு, ஆபத்தில் உதவும் நட்பு, உயிரைக் கொடுக்கும் நட்பு, தன்னலமற்ற நட்பு கடைசி வரை இருக்கும். நட்பு பள்ளிப்பருவ நட்பு, கல்லூரியில் கிடைக்கும் நட்பு, வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் நட்பு, நாம் செய்யும் business மூலம் கிடைக்கும் நட்பு என்று பல பரிமாணங்களைக் கொண்டது.
சுருக்கமாக சொன்னால் புதிதாக கிடைக்கும் முன் பின் தெரியாத ஒருவருடைய அறிமுகம் today onwards we are friends என்பதிலேயே முடியும். ஒரு படி மேலே போய் சொன்னால் நாம் காதலிப்பவர்களை கூட வீட்டில் நண்பர்களாகத்தான் அறிமுகப்படுத்துவோம். இப்படிப்பட்ட நட்பு கடைசிவரை இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அடுத்து மனைவி நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் உறவு இடையில் வருவது. பெற்றோர்களுக்கு பிள்ளை என்பது இடையில் வந்த உறவு, இது கணவன்,, மனைவி, பிள்ளை என தொடர நாம் வளர்ந்து சமூகத்தில் வாழத் தொடங்கும் பொழுது மற்றவர்களும் சேர்ந்து கொள்கின்றன.
இந்த உறவுகளுக்கு licence எதுவும் கிடையாது. இடையில் வந்தது தடையில் முடியலாம். ஆனால், மனைவி நம்மிடம் தாலி எனும் licence சை வாங்கிக்கொண்டு இடைவெளியில்லாமல் நம்மோடு வாழ்பவள்.
தாய்க்கு அடுத்தபடி நம் வாழ்வின் பாரத்தை பகிர்ந்துகொள்ளும் தாரம், இறைவன் கொடுத்த ஒரு வரம்!. நீ ஏன்? எனக்கு அந்த வரமாக இருக்கக்கூடாது என்றேன்.
உடனே அவள் எனக்கு உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு நான் இன்னும் உன் வாழ்வில் வரவே இல்லை ஆனால் இப்பொழுதே என் மீது உனக்கு இவ்வளவு பாசம் இன்னைக்கு எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடைந்துவிட்ட பேரானந்தம் என்றாள்.
சரி காயின் காலி ஆயிடுச்சு நாளைக்கு கால் பண்றேன் என்று கூறிவிட்டு காலை கட் செய்து விட்டாள்.
என்ன? காயினா ஆமாங்க என் காதலை வளர்த்தது one rupee coin box. எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் அவள் ஓகே சொன்னாளா? இல்லையா? என்று ஒரு டவுட்டூ.
நடந்ததைக் கூறி நண்பனிடம் கேட்டேன். மச்சி நீ பையன்டா open னா சொல்லிட்ட என்னதான் இருந்தாலும் அவளும் பெண் தானே! இந்த அச்சம், நானம், மடம், பயிர்ப்பு அதெல்லாம் இருக்க தானே செய்யும்.
மறைமுகமாகத்தான் சொல்லுவாங்க நம்ம தான் புரிஞ்சுக்கணும். நான் மீண்டும் ஒரு முறை மச்சி confirm தான? என்றேன். அதற்கு அவன் hundred percent success தான் என்றான்.
மச்சி இதை நம்ம celebrate பண்ணியே ஆகணும் டா night சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வாங்கட்டுமா? என்றான். நான்  எனக்கு chicken குழம்பு என்றேன். ஓகே உனக்கு மீன் குழம்பு பிடிக்காது என்று எனக்கு தெரியும். உனக்கு மட்டும் chicken குழம்பு வாங்க சொல்லி விடுறேன் என்றான்.
ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறவங்களுக்கு தெரியும் ஹாஸ்டல் சாப்பாடு எப்படினு எங்க ஹாஸ்டல் சாம்பாரையும் சைடிஷ் சையும் சமாளிக்க பெரும்பாலும் night சாப்பாட்டுக்கு ஹோட்டல்ல கொழம்பு வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
எப்போதாவது இட்லிக்கு வடகறி வாங்குவது உண்டு. இவ்வாறு வாங்கி சாப்பிடும் நண்பர்கள் குழுவில் ஐந்து பேர் நான்கு பேர் இருப்பார்கள் இவர்கள் turn அடிப்படையில் ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது ஒரு வாரத்திற்கு ஒருவர் என்று வாங்கி சாப்பிடுவார்கள்.
இதனை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பார்வையற்றவர்கள் எப்படி வெளியில் சென்று ஓட்டலில் வாங்கி வருவார்கள் என்ற சந்தேகம் ஏற்படலாம். பார்வையற்றவர்களில் முழு பார்வையற்றோர் குறை பார்வை உடையோர் என்று இரண்டு பிரிவினர் உண்டு.
பெரும்பாலும் வெளியில் செல்லும்பொழுது குறை பார்வை உடையோர் முற்றிலும் பார்வை இழந்தவருக்கு உதவியாக செல்வார்கள். அப்படியில்லையென்றால் ஊன்றுகோலை பயன்படுத்துவார்கள். பழகிய இடங்களில் முற்றிலும் பார்வையற்றோருக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது.
எங்கள் ஹாஸ்டலை சுற்றியுள்ள இடங்கள் பழகி இருந்ததால் நாங்களே வெளியில் சென்று எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து விடுவோம்.
நாங்கள் வழக்கமாக குழம்பு வாங்கும் கடையை நடத்துபவர் பெயர் செல்வம் அவர் எங்களோடு நன்றாக பழகுவார். இரவில் எவ்வளவு லேட்டாக சென்றாலும் எங்களுக்காக காத்திருந்து நாங்கள் வாங்கிய பிறகே கடையை அடைத்து விட்டு செல்வார்.
மதிய உணவுக்காக வைக்கப்படும் குழம்பு சில நேரங்களில் மீந்துவிடும் அதனை வீணாக்க விரும்பாதவர்கள் இப்படி காசாக்கி விடுவார்கள். நேரம் கடந்து சாப்பிடும் மீன் குழம்பிற்கு ருசி அதிகம் என்பார்கள்.
ருசியான குழம்புடன் இரவு உணவு நன்றாக முடிந்தது. மாலை நானும் அவளும் பேசிக்கொண்டதை நண்பனிடம் கூறிக்கொண்டே அவள் நினைவில் நிம்மதியாக உறங்கி விட்டேன். தொடரும், 1 of 2, In list, 2,  items

Friday, June 12, 2020

காதல் என்னும் அத்தியாயம் 8

உறவு! உலகில் வாழும் உயிர்களுக்கு கிடைத்த பொதுவான வரவு. உதிரத்தில் பூத்த உயிர்கள் மட்டுமே உறவாக கருதிய காலம் போய் உறவை விஞ்சிய உயிர்கள் இல்லை என்றாகிவிட்டது. தாயின் கருவறை தொடங்கி கல்லறை வரை பல்வேறு பரிணாமங்களை பெற்று நம்மோடு பயணிக்கின்றது.
ஆண் பெண் என்று பொதுவாக தோன்றிய உயிர்கள் கணவன் மனைவி, தாத்தா பாட்டி, தாய் தந்தை, மகன் மகள், அக்கா தங்கை, அண்ணன் தம்பி, அத்தை மாமா, போன்ற ரத்த உறவுகளோடு நில்லாமல் காலத்தின் பரிணாம வளர்ச்சியால் மற்ற உறவுகளையும் சேர்த்துக்கொண்டது. இதில் முதன்மை பெறுவது மருமகன் மருமகள் இவர்கள் ரத்த உறவாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.
நாம் உறவின் உன்னதத்தில் இருந்து விலகி நீண்ட நாள் ஆகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் கூட்டுக்குடும்பம் குறுகி தனிக்குடும்பம் ஆனதே. இப்பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் தந்தை உடன்பிறப்பு தவிர மற்ற உறவுகள் தெரிவதில்லை காரணம் அவர்கள் குறுகிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகும். பெற்ற குழந்தைகளை பேணிக்காக்க பேயாய் அலைந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளோடு கொஞ்சுவதற்கு கூட நேரமில்லை.
தாய்ப்பால் புட்டிபால் ஆகிவிட்டது.
வேலைக்காரி நிரந்தர தாயாகி விட்டாள். இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு அதாவது பெற்றோர்கள் வேலைக்கு சென்று வரும் வரை குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு குழந்தைகள் பராமரிப்பகம் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இத்தகைய சூழலில் வளர்ந்து வருபவர்கள் அன்பு, பாசம் போன்றவற்றை மற்றவர் இடத்தில் எதிர்பார்க்கிறார்கள்.
அதனை கொடுக்க தயாராக இருப்பவர்களை புதிய உறவுகளாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு பூக்கும் உறவுகளே காதல், நட்பு போன்றவையாகும். இவற்றால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.
உடைந்த கண்ணாடி துகள்களை கொண்டு மீண்டும் புதியதோர் கண்ணாடியை செய்து விடலாம். அது போலத்தான் உறவுகளும் உடைந்தால் ஒட்ட வைத்து விடலாம். ஆனால், ஒட்டியதை உடையாமல் பார்த்துக் கொள்வதுதான் கஷ்டம். அதைத்தான் தாத்தா என் பெற்றோரிடமும் அத்தையிடமும் கூறிக்கொண்டிருந்தார்.
நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் ஒட்டிய எங்கள் உறவை உடையாமல் நீட்டிக்க அவர் சொன்ன ஐடியா தான் என் மகிழ்ச்சிக்கு காரணம். அவர் சொன்ன அந்த ஐடியாவருங்காலத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது. அதனைக் கேட்ட என் பெற்றோரும் அத்தையும் குழந்தைகளின் படிப்பு முடியட்டும் அதன் பிறகு இதை பற்றி யோசிக்கலாம் என்றனர்.
அவர்கள் கூறிய பிறகு என்பதன் அர்த்தம் நீண்ட நாளைக்கு பிறகு தான் எனக்கு புரிந்தது. என்னவளுக்கு இதயத்தில் கட்டிய காதல் கோட்டைக்கு அதுவரை கடகால் மட்டுமே போடப்பட்டிருந்தது. தாத்தா கூறிய வார்த்தைகளால் கோட்டை குபீரென எழுந்து வசந்தமாளிகை க்கும் தாஜ்மஹாலுக்கும் இடையே ஒரு வடிவம் கொண்டு நின்றது.
அந்த நொடி முதல் அவளை என் காதல் கோட்டைக்குள் குடி ஏற்றிவிட்டு அவளோடு சேர்ந்து வாழ தொடங்கிவிட்டேன். தாத்தாவிடம் பேசி முடித்த பிறகு ஊருக்கு கிளம்பி விட்டோம். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை என் நண்பனிடம் ஃபோனில் கூறினேன்.
அதை கேட்ட அவனுக்கு அவன் காதல் கை கூடியது போல அப்படி ஒரு மகிழ்ச்சி. மச்சி treat வை டா என்றான். நாளைக்கு school ளுக்கு போறோம் இல்ல அப்ப பாத்துக்கலாம் என்றேன்.
School ளுக்கு போனேன்னு தான் பேரு படிப்பில் நாட்டமில்லை, பசி எடுத்தும் சாப்பாட்டில் ருசி இல்லை,, தண்ணீர் இருந்தும் தாகம் இல்லை, விளையாட்டின் மீது மோகம் இல்லை, இரவை கடந்தும் உறக்கமில்லை, பகலுக்கு கூட என்மேல் இரக்கம் இல்லை.
எப்பொழுதும் ஒரே நினைவு எதிர்கால வாழ்வின் கற்பனைக் கனவு. விழித்துக்கொண்டு நான் காணும் கனவிற்கு ஒருபொழுதும் உறக்கம் வந்ததே இல்லை. தனிமை வாட்டிய போதெல்லாம் ஆறுதலாய் அருகில் நண்பன். நட்பு எனும் விழுது இல்லாவிட்டால் பலருடைய வாழ்வில் காதல் என்னும் மரம் செழித்து வளர்வதற்கு வாய்ப்பே இல்லை.
காதல் என்றாலே அதற்கு பல, வண்ண சாயங்கள் பூசி கைகழுவும் உறவுகள் மத்தியில் இரு கரங்கள் இணைய ஒரு குடையின் கீழ் பூக்கும் ஓராயிரம் பூக்களே நட்பு.
அத்தகைய நட்பை நான் பெற்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு நாள் என் ஏக்கத்தீயைய் அணைக்க அவளிடமிருந்து போன் கால் வந்தது. ஆனால், அதிர்ஷ்டம் இல்லாத நான் அந்த போன்காலை மிஸ் செய்து விட்டேன். நான் என் போனை சார்ஜ் போடுவதற்காக என் நண்பனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டேன். எங்கு போய் இருந்தேன் என்பது எனக்கு சரிவர நினைவில்லை.
போனை அட்டெண்ட் செய்து பேசிய என் நண்பன் அதை என்னிடம் கொடுக்க பல இடங்களில் என்னைத் தேடி பார்த்து இருக்கிறான்.. அவனுக்கும் நான் எங்கே சென்று இருந்தேன் என்பது தெரியாது. வேறு வழி இல்லாமல் விஷயத்தை. அவளிடம் கூறினான். ஆசை, ஆசையாய் என்னிடம் பேச போன் செய்து இருந்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நண்பன் கூறியதை கேட்ட அவள்  அண்ணா நாளைக்கு இதே டைமுக்கு நான் போன் பண்ணுவேன்னு அவன் கிட்ட சொல்லிடுங்க என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள்.
மேலே கூறிய அனைத்தும் நான் திரும்ப வந்தவுடன் என் நண்பன் என்னிடம் கூறியது.. என் மீது எனக்கே கோபம் வந்தது. கடவுளைக் கூட திட்ட தோன்றியது. என்நிலை அறிந்து நண்பன் வருத்தப்பட்டான். கடைசியில் அவனை நான் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு முறையும் நாம் தவறவிடும் ஏதோ ஒரு விஷயம் நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்த முயற்சிக்கிறது. அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது, சிலருக்கு இன்பத்தையும் பலருக்கு துன்பத்தையும் தரலாம். இன்பதுன்ப வரவுகள் அதிர்ஷ்டசாலிகளை பொருத்தது.
நீண்டநாள் ஏக்கத்தோடு காத்திருந்த நான் அவள் சொன்ன அந்த time காக காத்திருந்தேன். அந்த time மும் வந்தது அவளிடமிருந்து phone னும் வந்தது. hello என்று அவள் குரலை கேட்டால் ஆகாயத்திலிருந்து ஆண்டவன் கூட வழுக்கி விழுந்து விடுவான். அவனே அப்படின்னா அற்ப மனிதன் நான் வழுக்காமலே விழுந்துவிட்டேன்.
நானும் hello என்றேன். நல்லா இருக்கியா, சாப்பிட்டியா, வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க, படிப்பு எப்படி போகுது இவை அனைத்தும் நாங்கள் மாற்றி, மாற்றி ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்ட கேள்விகளாகும்.
அதன் பிறகு என்ன பேசுவதென்றே இருவருக்கும் தெரியவில்லை. மீண்டும் நானே ஆரம்பித்தேன். தாத்தா கூறியதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்றேன். அவள் அதற்கு தாத்தா என்ன கூறினார்? என்று கேட்டுவிட்டு சிரித்தாள்.
அவள் சிரிப்பு எனக்கு வெறுப்பாக இருந்தாலும் நான் மௌனமாக இருந்தேன். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவள் நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டாள். கள்ளி தெரிந்துகொண்டே நடிக்கிறாள் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டேன். தொடரும், Edit box, 1 of,  2

Sunday, May 31, 2020

காதல் என்னும் அத்தியாயம் 7

வாங்க பாட்டுப்போட்டி பாதியிலேயே நிக்குது மீதமுள்ள இசை குயில்களின் இசையைக் கேட்டு விடலாம். அடுத்து பாடுபவர் இன் பெயரை தொகுப்பாளர் வாசிக்க ஆசை மச்சான் வாங்கி தந்த மல்லியப்பூ அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு என்று சொர்ணலதாவின் தங்கச்சி போல் பாட அதைக்கேட்டு மல்லிகைப்பூ வாங்க மறந்த ஆண்கள் சிலர் மனைவிகளைப் பார்த்து கண்ணடிக்க அவர்கள் கண்ணம் சிவக்க அப்புறம் என்னஇரவு இன்பமயம் தான் என்று மல்லிகைப் பூ வாங்க மச்சான்கள் புறப்பட்டனர்.
இது இப்படி இருக்க அடுத்து வந்தவர் நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல என்று தொடங்க பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த சில குமரிகள் மேடையை நோக்கி உன் தூக்கத்தை கெடுத்தது யார்? என்று கேட்டு கேலியும் கிண்டலும் மாய் சிரித்தனர். அவர்களுடைய சிரிப்பு இசைக்கு இனிய ராகம் சேர்த்தது.
நீங்கள் திட்டுவது எனக்கு கேட்கிறது; உங்கள் பொறுமைக்கு நன்றி. அடுத்து வருவது அவள்தான் எல்லோரும் காத்திருந்தது இதற்காகத்தான் என்பது அவர்களுடைய உற்சாக வரவேற்பிளே தெரிந்தது. எனக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை.
அடுத்து நடப்பதை அறியும் time machine போல, எனக்கும் ஒரு power இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
இப்படி நான் எனக்குள் யோசித்துக் கொண்டிருக்க அடுத்து நீங்கள் கேட்க இருக்கும் பாடல் ராஜா sir இசையில் ஜானகி அம்மா பாடியது. அந்த பாடல்  இப்பொழுது நம்ம ஊரு ஜானகியின் குரலில் என்று தொகுப்பாளர் அவர் பங்குக்கு ஏதோ ஒன்றை சொல்லி வைக்க கூட்டம் ஆர்ப்பரித்தது. அவள் குரலோ எனை இழுத்தது.
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே என்ற மெல்லிசை அவள் மென்மையான குரல் ஓசையில் மெருகேறி கொண்டிருந்தது. என் இதயம் இடம் மாறிக் கொண்டிருந்தது.
இதயத்தை ஈர்த்த அந்த வரிகள் இதோ உங்களுக்காக உன்னை எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னி பொண்ணு தானே என் மாமனே, என் மாமனே ஒத்தையிலே அத்த மக உன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணுரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே என்று பாடி முடிக்க (செம்புல பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!) என்ற சங்க இலக்கிய வரிகள் சாட்சியாக இரு இதயங்கள் இரண்டறக் கலந்தன.
என்னவள் பாடி முடித்ததும் தொகுப்பாளர் இத்துடன் பாட்டுப்போட்டி முடிவடைந்தது என்று கூறி முடித்து வைத்தார். அடுத்து வரவேற்புரையுடன் பரிசளிப்பு விழா தொடங்கியது. பாட்டு போட்டியின் முடிவுகளை அறிந்துகொள்ள உங்களைப் போல் எனக்கும் ஆர்வமாய் இருந்தது.ஆனால் முதலில் மற்ற போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாட்டு போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு முதல் பரிசு பெற்றவர் ஊர் பெரியவர்களுக்காக மீண்டும் ஒருமுறை மேடையில் தனது பாடலை பாடினார்.
எல்லோருடனும் சேர்ந்து மீண்டும் புதிதாய் கேட்பது போல நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்பிறகு பாட்டு போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. மூன்றாம் பரிசு சின்ன சின்ந ஆசை என்ற பாடலை பாடியவருக்கும் இரண்டாம் பரிசு நான் ஆளான தாமர என்ற பாடலை பாடியவருக்கும், முதல் பரிசு என்னவளுக்கும் கிடைத்தது.
அதை தொடர்ந்து வெற்றியாளர்கள் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்க
நன்றி உரையோடு பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது. சற்று நேரத்தில் மைதானத்தில் இருந்த அனைவரும் கலைந்து அவரவர் வீட்டிற்கு செல்ல தொடங்கினர். நாங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அவள் பரிசுகளை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து பார்க்க சொன்னாள். அதில் இரண்டு hot box சும் ஒரு tiffin box சும் இருந்தது. நான் அதை பார்த்து விட்டு அவளிடம் கொடுத்து விட்டேன்.
அத்தைக்கு ஒரே பெரு மிதம் மகள் வாங்கிய பரிசுகளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டே அனைவரும் தூங்கி விட்டோம். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். ஆனால், நாங்கள் வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. அதனால் காலை உணவை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாரானோம்.
அத்தை மேலும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு போகலாம் என்றார். ஆனால், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வேலை செய்யும் இடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே விடுமுறை கொடுத்து இருந்ததால் அதனைக் கூறி அத்தையை சமாதானப் படுத்திவிட்டார்கள். கிளம்பும் பொழுது தாத்தா என் கையை பிடித்துக்கொண்டு அடிக்கடி தாத்தாவைப் பார்க்க வரணும் என்றார்.
நான் சரி தாத்தா கோடை விடுமுறைக்கு வருகிறேன் என்றேன். அடுத்து தாத்தா அப்பா, அம்மா, அத்தை ஆகியோரை அழைத்து கூறிய செய்தி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்க செய்தது. அச்செய்தி எனக்கு கரும்பு சாற்றுடன் தேன் கலந்து அத்தோடு முக்கனியின் சுவை கூட்டி தயாரித்த அமுழ்தம் போன்றது.
என் இதயம் இயக்க வேகத்தை கூட்டி இன்ப சுற்றுலா சென்று கொண்டிருந்தது. தொடரும், Edit box, 1 of 2

Saturday, May 23, 2020

காதல் என்னும் அத்தியாயம் 6:

கடையில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பிறகு அனைவரும் மீண்டும் நடக்கத் தொடங்கினோம். மாலை நேர சூரியன் மறைந்து கொண்டிருந்தது. இளம் குளிர் காற்று வீச அவள் துப்பட்டா என் முகத்தோடு பேசஅதை மற்றொரு கையில் பிடித்து செல்லமாக கடிந்து கொண்டாள்.
அதன் சுவாசத்தில் அவள் வாசத்தை உணர்ந்தேன் மேலும் அவள் செய்கையால் பாசத்தை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் அனைவரும் கோயிலை அடைந்தோம். கோயில் பூசாரி அப்பாவுக்கு தெரிந்தவர் முன்பே சொல்லி வைத்தபடி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.
எங்களை பார்த்தவுடன் பூசாரி வாங்க, வாங்க எல்லாரும் சேமமா என்று நலம் விசாரித்தார். அதன்பிறகு பூஜைக்கு நாழி ஆயிடுச்சு வாங்கோ என்றார்.எல்லோரும் கோயிலுக்குள் சென்று பூஜையை நன்றாக முடித்து விட்டு வெளியில் வந்தோம்.
என்ன மெட்ராஸ் காரரே இப்ப தான் இங்க வரதுக்கு உங்களுக்கு நேரம் கிடைச்சதா? என்ற ஒருவரிடம் அப்பா எங்களை‌ introduce பண்ணி வைத்தார். யாரோ ஊர் பெரியவர் என்றார்.
இப்படியே எங்களை நலம் விசாரித்த நாலு ஐந்து பேரிடம் பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தோம். இரவு உணவை முடித்து விட்டு ரொம்ப டயர்டாக இருந்ததால் எல்லோரும் தூங்க சென்று விட்டோம்.
காலையில் மாட்டு பொங்கலை மகிழ்வோடு கொண்டாட சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து தயாரானோம். உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் பெருமையாக அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் மாட்டுப் பொங்கல் உழவனின் உடல், பொருள், ஆவியாக விலங்கும் மாடுகளை சிறப்பிக்கும் வகையில் அமையும்.
மாடுகளை வைத்திருக்கும் உழவர்கள் அவற்றை நன்றாக குளிப்பாட்டி கொம்புகளை சீவி அதற்கு வண்ணமிட்டு வண்ண வண்ணப் பொட்டுகளால் அழகாக அலங்கரிப்பார்கள். அதை பார்ப்பதற்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். நாள்தோறும் அவ்வாறு பராமரிக்க பட்டாள் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.
அடிக்கடி நடைபெறும் ஒன்று புதுமையாக தோன்றாது அல்லவா? அதனால்தான் உழவர்களின் செல்வங்கள் ஆகிய மாடுகள் வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. அதன் பிறகு பொங்கல் வைத்து படைத்துவிட்டு மாடுகளுக்கு கொடுப்பார்கள்.
எங்கள் வீட்டில் மாடுகள் இல்லை அதனால் அவ்வளவு சிறப்பாக கொண்டாடவில்லை. எங்கள் வீட்டில் மதிய உணவிற்காக ஆடு, கோழி, மீன் என வகைவகையான அசைவ உணவு தயாராகிக்கொண்டிருந்தன. பொதுவாக மாட்டுப்பொங்கலன்று அனைவர் வீட்டிலும் அசைவ உணவு செய்வது வழக்கம்.
மதிய உணவு நன்றாக இருந்தது. அன்றைய நாள் போரடிக்காமல் செல்ல அடுத்த நாள் ஊரே கலை கட்டியது. அடுத்த நாள் காணும் பொங்கல் அன்றுதான் பொங்கல் கொண்டாட்டம் முழுமை பெறும். பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
குட்டீஸ்களுக்கு பலுன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போன்றவையும் இளவட்ட ஆண்களுக்கு மட்டைப்பந்து, கபடி, நீச்சல் போன்றவையும் குமரி களுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி போன்றவையும் பொதுவான போட்டிகளாக உரி அடித்தல், கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவையும் நடைபெறும்.
போட்டிகளை எவ்வித பிரச்சனையும் இன்றி நடத்தி தருவது ஊர் இளைஞர்களுடைய பொறுப்பு. பரிசுகள் கொடுக்கும் பொறுப்பை ஊர் பெரியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
போட்டிகள் ஊர் கோவில் முன்பு இருக்கும் பொது மைதானத்தில் நடைபெறும். போட்டியாளர்களை உற்சாகப்படுத்த ஊர் மக்கள் அனைவரும் மைதானத்தில் கூடுவர். பெற்றோர்கள் குழந்தைகளையும், கணவர்கள் மனைவிகளையும், மனைவிகள் கணவர்களையும், நண்பர்கள் தங்கள் நண்பர்களையும், காதலர்கள் தங்கள் காதலர்களையும் கைதட்டி உற்சாகப் படுத்துவார்கள்.
போட்டியில் தோற்று விட்டால் ஆண் பெண் என்ற பாரபட்சமில்லாமல் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள். சிலர் பெற்றோர்களுக்காக, சிலர் மனைவிக்காக, சிலர் கணவருக்காக, சிலர் காதலர்களுக்காக, சிலர் நண்பர்களுக்காக, சிலர் ஊரில் கெத்தாக திரிவதற்காக, சிலர் முந்தைய வருடங்களின் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக என வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் இருக்கும்.
போட்டி என்றால் வெற்றி தோல்வி இரண்டில் ஒன்று நிச்சயம். அன்று அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர் வசம் வெற்றி. அதனால் போட்டிகள் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்காய் அமையும்.
இத்தனை போட்டிகளையும் ஒரே நாளில் நடத்துவது என்பது கடினமான ஒன்று. அதனால் சில போட்டிகள் முன்பே திட்டமிட்டு. நடத்தப்படும். நாங்கள் ஊரில் இருந்து வந்ததால் பார்வையாளர்களாகவே இருந்தோம். போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே போட்டியில் கலந்து கொள்ளாத மற்றவர்கள் தங்கள் தனித் திறமையைக் காட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்ளாத ஆண் பெண் இளவட்டங்கள் தங்கள் நடன திறமைகளை அரங்கேற்று வார்கள். போட்டியை கண்டு களிப்போர் இடையிடையே தங்கள் பார்வையை மேடையின் மீது  செலுத்துவார்கள். சிலர் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட போட்டியிலும் பொதுவான போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.
அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. சிலர் விருப்பப்பட்ட போட்டியில் மட்டும் கலந்து கொள்வார்கள். சிலர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு இருப்பார்கள். பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர்கள் மீது கொண்ட நம்பிக்கையால் சில போட்டிகளில் அவர்களிடம் கேட்காமலேயே பெயர்களை கொடுத்துவிடுவார்கள் அதுபோன்றுதான் இவர்களும் சேர்க்கப்பட்டார்கள்.
என்னவள் கோலப்போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி மற்றும் குழு போட்டியான கயிறு இழுத்தல் ஆகியவற்றில் கலந்து கொண்டாள். அவளுக்கென மைதானத்தில் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரத்தோடு அவளை உற்சாகப்படுத்தினர். நானும் அவர்களோடு கலந்து கொண்டேன்.
கயிறு இழுத்தல் போட்டியில் அவள் குழு தோற்றுவிட்டது. ஆனால் அவளுக்கு கோலப் போட்டியில் மூன்றாவது பரிசும் இசை நாற்காலியில் முதல் பரிசும் கிடைத்தது. இசை என்பது நியூட்டனின் ஈர்ப்பு விசை போன்றது அது இளசுகள் தொடங்கி பெருசுகள் வரை அனைவரையும் ஈர்த்துவிடும். இறுதியாக பாட்டுப் போட்டி தொடங்கியது.
முதலாவதாக வந்த பெண் சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை, முத்து முத்து ஆசை, முடிந்து வைத்த ஆசை என்று தொடங்க அடுத்து வந்தவர் ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு ஊறுகாயா நான் இருக்கேன் என்று பாட ஆரவாரம் அதிகமானது. தொடரும், Edit box, 1 of,  2

Saturday, May 16, 2020

காதல் என்னும் அத்தியாயம் 5:

அவள் என் தலையில் கொட்டிய போது கைகளில் இருந்த வளையல் சத்தம் கொலுசின் ஓசைக்கு கோரஸாய் சேர்ந்துகொண்டது. மாலை நேர இளம் தென்றல், அருகிலே ஒளிவீசும் மின்னல், அதை நினைக்கும் போதே நான் பறக்கிறேன் விண்ணில், ஆஹா இன்னும் என்னென்ன அதிசயங்களோ பெண்ணில், இவை யாவும் எண்ணங்களால் எண்ணில் இனிக்குது நெஞ்சில்.
இவ்வாறு என் மனம் சேராத வார்த்தைகளை சேர்த்து, கோராத மாலைகளாய் கோர்த்து தீராத ஆசைகளை தீர்த்துக் கொண்டிருக்க அவள் பூ கரம் இல்லை, இல்லை பொன் கரம் என் கரத்திலிருந்து விருப்பின்றி விடைபெற்றது.
என் அக கேமராவில் அவளை அனிமேஷன் செய்து கொண்டிருந்த நான் இதை கவனிக்க தவறினேன். மீண்டும் அவளுடைய பொன் கரங்கள் என் தோளைப் பற்றி சிறிது இழுக்க 3d எபெக்ட் இல் இருந்த நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.
அவள் என்னை பார்த்தால் உனக்கு பேய் மாதிரி தெரிகிறதா? வேட்டைய புர அரண்மனைக்கு சென்று வந்த வடிவேலை போல, இப்படி உறைந்து போய் நின்று கொண்டு இருக்கிறாய் என்றாள்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை வாயாடி மேலே எதற்கு வந்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன் நான். உடனே அவள் ஒரு அழகான பையன் வந்திருப்பதாகவும், அவன் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அதான் பார்த்துட்டு போலாம் என்று வந்தேன் என்றாள்.
அவள் பேச்சில் அப்படியே கிராமத்து துடுக்கு அதை நான் ரசித்தாலும் பார்த்தாச்சு இல்ல போகலாம் என்றேன். போவாங்க, போவாங்க இந்தாங்க காப்பி என்றால். நான் எப்படி வாங்குவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அவள் என் கைகளைப் பிடித்து இந்தா பத்திரமாக பிடி என்று கொடுத்தாள். நான் வாங்கிக்கொண்ட உடன் அவள் கீழே இறங்கி சென்று விட்டாள் பொதுவாக பிடித்தவர்கள் கொடுத்த பொருள் இனிப்பை இமாலயன் ரேஞ்சுக்கு இன்க்ரீஸ் செய்யும். ஆனால் எனக்கு அருகில் அவள் இல்லாததால் அதிக சர்க்கரை உடைய காப்பியும் சற்று கசக்கத்தான் செய்தது.
காதலி போயிட்டா அடுத்து யாரு நண்பன் தானே? இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் phone னை எடுத்து ஹலோ என்றான். ஹாய் மச்சி எப்படி இருக்க என்றேன். நான் நல்லா இருக்கேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றான்.
நான் உடனே நீங்களா? என்றேன் அதற்கு அவன் ஆமாம் இனி நீ என்பது நீங்கள் தானே? என்றான் இப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் அவளையும் சேர்த்து சொல்கிறான் என்று.
உடனே நான் இன்னைக்கு, இன்னைக்கு என்று இழுக்க ஆரம்பிச்சிட்டாண்டா இனி off பண்ணவே மாட்டான் என்றான். நான் வந்த கோவத்தை அடக்கி கொரியரில் அவனுக்கு அனுப்பிவிட்டு வராத சிரிப்பை வர வைத்து சிரித்தேன்.
சரி விடு மச்சி உன் கோபம் எனக்கு புரிகிறது இன்று நடந்ததை கூறும். என்று மன்னன் போல் கேட்க நான் அமைச்சர் போல அடக்கமாய் நடந்ததை கூறினேன்.
அப்புறம் சொல்லிட்டியா என்றான் நான் மெதுவாக இல்லை, இல்லை என்றேன். உடனே அவன் அவள் கொடுத்த காபி இங்கு என்னிடம் வழிந்து கொண்டிருக்கிறது அங்கு இது அப்படியே வார்த்தைகளாக வழிந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றான்.
மச்சி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத பொண்ணுங்க மனசு வாடகை வீடு போல, எவன் எப்ப ரெண்டுக்கு வருவானே தெரியாது முந்திகிட்டா உனக்கு மோட்சம் இல்லையினா நீ போயிடுவ மோசம் என்று கூறிவிட்டு phone னை கட் செய்துவிட்டான்.
நான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தேன். என்ன சாருக்கு சாப்பாடு மேலே வரணுமா என்றாள் அக்கா. அதான் வந்துவிட்டேனே என்றேன்.
இரவு உணவு இட்லி உடன் சிக்கன் குருமா ஆனால் எனக்குத்தான் அதில் ஈடுபாடு இல்லை. மனம் முழுவதும் நண்பன் கூறியவையே ஓடிக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று இட்லிகளோடு எழுந்ததாக ஞாபகம். எல்லோரும் ஏன் என்று கேட்க ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து விட்டு அப்படியே போய் படுத்துக் கொண்டேன்.
மின்விசிறியின் செயற்கை காற்றையும் ஜனவரியின் கடும் குளிரையும் மீறி படுக்கையில் வெப்பம் என்னை வாட்டிக் கொண்டிருந்தது. நித்திரை தேவியோ நினைவுகள் மட்டும் போதும் இன்று உனக்கு கனவுகள் தேவை இல்லை என்றால்.
அப்பொழுதும் எனக்கு சித்திரையே அடி சித்திரையே ஏன் நித்திர போயிடுச்சு. இந்த பாழாப் போன காதல் என்ன பைத்தியம் ஆகிருச்சு என்று பாடத் தோன்றியது..
நேரம் நடுநிசியைய் எட்டியது நான் விழிமூடி தூக்கத்தை தேடினேன். இம்முறை நித்திரை தேவி என்மீது இரக்கம் கொண்டாள் நான் உறக்கம் கொண்டேன்.
அடுத்த நாள் காலை போகிப்பண்டிகை ஓடு அனைவருக்கும் விடிந்தது எல்லோரும் தங்கள் வீட்டில் பழையது எனக்கருதிய அனைத்தையும் நெருப்பிட்டு எரித்து போகியை கொண்டாடினர் எங்களுக்கும் அது சிறப்பாகவே அமைந்தது. அன்றும் விருந்து உபசரிப்பு நன்றாகவே இருந்தது. இரவு உணவு முடிந்தவுடன் வீட்டுப்பெண்கள் கதை பேச ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டாள் அதற்கு முடிவே கிடையாது. பக்கத்து வீட்டு மாமியின் ஆரம்பித்து எதிர் வீட்டு அக்கா, தூரத்து உறவுக்காரப் பெண் என்று நீண்டு  கொண்டே செல்லும்.
கூட்டத்தில் ஒருவர் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சாண்டி என்பார் அது அப்படியே யாருக்கு, எப்ப, எத்தனை குழந்தை, என்று மற்றவர்களிடமிருந்து கேள்விகளாய் தொடரும். பொதுவாக பெண்களின் பேச்சில் பலருடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும். இது சில நேரங்களில் கேட்பதற்கு இன்ட்ரஸ்ட் ஆக இருந்தாலும் பல நேரங்களில் அவர்களை திட்ட தோன்றும்.
இடையிடையே அவளையும் என்னையும் சேர்த்துவைத்து கிண்டல் செய்தார்கள். இருவருக்கும் வெட்கத்தைப் பாரேன் என்று அத்தையும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். எனக்கு அது உள்ளூர இனிப்பாய் இருந்தது அவளுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.
திடீரென்று அம்மா நாளைக்கு பொன்னியம்மன் கோயிலுக்கு போக வேண்டும் என்றார். அவருக்கு ஒரு வேண்டுதல் இருந்தது அது நிறைவேறும் வரை யாரிடமும் சொல்லக்கூடாது ரகசியமாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. பெரும் பொங்கல் அன்று பொன்னியம்மன் கோவிலில் பூஜை விமர்சையாக நடைபெறும் அம்மனுக்கு சேலை அணிவித்து பெண்கள் வேண்டிக் கொள்வது வழக்கம். இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது அத்தை எல்லோரும் சென்று தூங்குங்கள் என்று கூறிவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு வாசலில் கோலம் போட சென்றுவிட்டார். இரவில் ஏன் கோலம் என்று கேட்பவர்களுக்கு ஒருவேளை காலை எழுவதற்கு லேட்டாகி விட்டாள் முன்னேற்பாடாக இது போன்ற சில வேலைகளை இரவே செய்து விடுவார்கள்.
காலையில் அனைவரும் சீக்கிரமாகவே எழுந்து குளித்துவிட்டு புத்தாடைகளை அணிந்து கொண்டோம். பெண்கள் ஒவ்வொருவராக கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்து கொண்டு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் மீண்டும் மீண்டும் அதனை சரி பார்த்துக் கொண்டனர். பொதுவாக பெண்கள் எவ்வளவு அழகான ஆடைகளை அணிந்திருந்தாலும் அவர்களுடைய கவனம் மற்றவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளிளே இருக்கும். அடுத்த முறை அதை வாங்குவதற்கு கணவனின் சம்பளத்திலிருந்து ஒரு பட்ஜெட்டை ஒதுக்கி விடுவார்கள். குடும்ப வாழ்வில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் பெண்கள் தானே? நான் பெண்களைப் பற்றி பேசிக்கொண்டே பொங்கலை மறந்துவிட்டேன்.
வாங்க பொங்கல் வைக்கும் இடத்திற்கு செல்வோம் வீட்டின் முன்பு இரண்டு அடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன இரண்டு அடுப்புகளிலும் புது பானைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பானையில் உப்பு கலந்த பச்சரிசிப் பொங்கலும் மற்றொரு பானையில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெள்ளம் போன்றவை கலந்த இனிப்பு பொங்கலும் தயாராகிக்கொண்டிருந்தன.
பொங்கல் நன்றாக பொங்கி பானையின் மேல் வழியும்போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என்றோம். அதன்பிறகு அனைவரும் பொங்கலை சாப்பிட்டோம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தோம். மதிய உணவை முடித்துவிட்டு அனைவரும் ஒரு குட்டித்தூக்கம் போட்டோம். மாலை எழுந்து அனைவரும் கோயிலுக்கு கிளம்பினோம். பொன்னியம்மன் கோவில் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில் இருந்தது.
அனைவரும் நடந்தே செல்வதாக முடிவு செய்தோம். பெரும்பாலும் வெளியில் செல்லும் போதெல்லாம் அக்கா என் கையை பிடித்து அழைத்துச் செல்வதே வழக்கம். இம்முறை அவள் என் கையை பிடித்துக் கொண்டாள் இருவரும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம் என் மனம் பூஞ்சோலையில் பறந்து கொண்டிருந்தது. வழியில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க ஒரு கடையில் நின்றோம். நாங்கள் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்தோம்.
அப்பொழுதும் அவள் என் கைகளை விடாமல். பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். சாலையின் ஓரம் ஒரு இணை பிரியா ஜோடி என்று அக்கா கிண்டல் செய்ய சுத்தி போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பருன்னு ஊருக்குள்ள பேச்சு. வயலுக்கு போற சனம் எல்லாம் பச்ச நெல்லாக நம்ம பேர நடவு செய்த யா. சந்தையில கூடுர கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம நம்ம சேதி வாங்கி போகுதய்யா என்ற பாடல் அந்த கடையில் இருந்த ரேடியோவில் பாடிக் கொண்டிருந்தது.
உடனே அக்கா what a timing song என்றாள். வெட்கத்தில் அவள் கண்ணங்கள் சிவந்து இருக்க வேண்டும். அது அவளுடைய கை அசைவிலும் அழுத்தத்திலும் தெரிந்தது. தொடரும், Edit box, 1 of,  2

Sunday, May 10, 2020

காதல் என்னும் அத்தியாயம் 4:

நண்பனிடம் விடைபெற்று பிரியாமல் பிரிந்து சென்றேன். இரவு phone செய்து அவன் ஊருக்கு கிளம்பியதை உறுதி செய்து கொண்டேன்.
வீட்டில் இரவு உணவு முடிந்தவுடன் ஊருக்கு செல்வது குறித்து அனைவரும் பேசி காலையில் செல்வது என ஒரு முடிவுக்கு வந்தோம். ஊருக்கு சென்று குறைந்தது நான்கு நாட்களாவது தங்க வேண்டி இருந்ததால் அதற்கான ஆயத்த பணிகளை அக்காவும் அம்மாவும் செய்து கொண்டிருந்தனர்.
எட்டு வருடம் கழித்து ஊருக்கு செல்வதால் உறவினர்களுக்கும் புத்தாடைகள் எடுக்கப்பட்டு இருந்தது அதனையும் பத்திரமாக எடுத்து வைக்கச் சொல்லி அம்மா அக்காவிடம் கூறினார். கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் தூங்க சென்று விட்டோம் ஆனால் எனக்கு மட்டும் தூக்கமே வரவில்லை. உருண்டு புரண்டு படுத்து பார்த்தேன் தூக்கம் வரவில்லை.
மனம் எதையோ யாரையோ நினைத்துக் கொண்டிருந்தது. பலரின் தனிமையை இனிமையாக்கும் அருமருந்து இசை. நான் என் சைனா செட்டில் headphone னை மாட்டி அதை காதுகளுக்கு பொருத்தினேன். அது குருவாயூரப்பா, குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி என்ற பாடலை ஒலித்தது. அப்பாடலை ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு எத்தனை தடவை கேட்டேன் என்று தெரியவில்லை காலையில் அக்கா வந்து எழுப்பிய போது தான் தெரியும் நான் தூங்கிப் போய் இருந்தேன் என்பது.
அனைவரும் குளித்துவிட்டு காலை டிபனை முடித்துக் கொண்டு கிளம்பினோம் திடீரென்று வெளியிலிருந்து வந்த அப்பா நாம் மகிழுந்தில் செல்கிறோம் என்றார். மகிழுந்து என்றவுடன் எனக்கும் அக்காவுக்கும் ஒரே மகிழ்ச்சி அம்மா மட்டும் பேருந்தில் போகலாமே எதற்கு செலவு என்றால்.
அப்பா ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். மகிழ்வுந்தில் எந்த மாற்றமும் இல்லாமல் பயணம் தொடங்கியது. பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் அத்தையிடம் இருந்து phone வந்தது. எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார் நான் அதையே அப்பாவிடம் கேட்டு முக்கால் மணி நேரம் ஆகும் என்று கூறிவிட்டு phone னை கட் செய்து விட்டேன்.
மகிழுந்து வீட்டின் அருகில் சென்று நின்றவுடன் என் தேவதை குடியிருந்த கோயில் வந்து எங்களை வரவேற்றது. என்னது கோயிலா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அதாங்க என் அத்தையை சொன்னேன். சிறிது நேரத்தில் வீட்டின் அருகில் பெரும் கூட்டமே கூடிவிட்டது. உறவினர், அண்டைவீட்டார், பக்கத்து தெரு வினர் என்று அனைவரும் வந்து நலம் விசாரித்து சென்றனர்.
கூட்டத்தில் என் நிலைமை படுமோசம் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று பலரும் என்னிடம் அவர்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அதில் சிலர் நான் யார் என்று கேட்டு என்னை test செய்து கொண்டார்கள். பெரும்பாலும் என்னைப் போன்றவர்கள் இதனை விரும்புவதில்லை.
இதுபோன்ற நேரங்களில் கோபம் தான் வரும் பாவம்! இது அவர்களுக்கு எப்படி புரியும். எல்லா பார்வையற்றோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவர்கள் எங்களுக்கு தந்த வரவேற்பு நாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தது போன்ற பிம்பத்தை எனக்கு ஏற்படுத்தியது. உண்மை தான் தமிழகத்தின் பல கிராமங்களில் இருக்கும் சிலருக்கு சென்னையும் வெளிநாடு போன்றதுதான். இன்று வரை அவர்களுக்கு சென்னை என்பது கனவாகவே இருக்கிறது. சிலருடைய பிள்ளைகள் மேற்படிப்பிற்காக சென்னைக்கு வந்து இருக்கலாம், சில பெண்களுடைய கணவர்கள் கட்டுமான பணிகளுக்காக சென்னைக்கு வந்து இருக்கலாம், சிலர் குடும்பத்தோடு இடம் பெயர்ந்திருக்கலாம் இவ்வாறு வந்தவர்களில் சிலருடைய உறவினர்கள் அவர்களை பார்க்க வந்து இருக்கலாம்.
பலர் வருவதில்லை காரணம் அவர்களுடைய ஏழ்மை. இதனைப் படித்துக் கொண்டிருக்கும் சிலர் மேற்கூறியவற்றை மறுக்கலாம் எப்படியாக இருப்பினும் அதுதான் நிதர்சனமான உண்மை.
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெழும்பு, கிராமங்கள் சுயராஜ்யம் பெற வேண்டும் என்று தேசத்தந்தை காந்தியடிகள் போன்றவர்கள் கூறியிருக்கின்றார்கள். தற்பொழுது நம்மை ஆண்டு வரும் பல தந்தைகள் கிராமங்கள் என்பதையே மறந்து விட்டனர். சரி, சரி கொஞ்சம் over ராக பொங்கி விட்டேன். சமூகத்தை விடுவோம் என் சங்கதிக்கு வருவோம். நலம் விசாரிக்க வந்த அனைவரும் சென்றபிறகு என் தாத்தா என்னை அழைத்து அவர் அமர்ந்திருந்த கயிற்றுக்கட்டிலில் அருகில் அமர்த்திக் கொண்டார். என் கையை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தார் அவர் அழுவதை பார்த்து மற்றவர்களும் அழுதனர் என் கண்கள் கூட ஓரிரு துளிகளை உதித்தது.
அப்பாவுடன் பிறந்த அனைவருக்கும் பெண்குழந்தைகள் மட்டுமே நான் ஒருவன் மட்டுமே அனைவருக்கும் ஆண் குழந்தை அதனால் அனைவருக்கும் என் மீது பாசம் அதிகம். தாத்தாவின் பாசத்திற்கு அதுவும் ஒரு காரணம் உறவு புதுப்பிக்கப்பட்டது தாத்தாவிற்கு மகிழ்ச்சி.
என் கிராமத்தையும் தாத்தாவையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். எங்கள் கிராமத்தில் மரியாதைக்குரிய நான்கைந்து குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. ஊரில் உள்ள நாட்டாமை களில் தாத்தாவும் ஒருவர்.
கிராமம் பல கட்டுப்பாடுகளை கொண்டது கலப்பு திருமணம் ஏற்றுக்கொள்ளப்படாது. சாதி என்பது இங்குள்ளவர்களின் உதிரத்தில் உதித்தது காதல் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படாது அதுவும் வேற்று சாதியினர் என்றால் சொல்லவே தேவையில்லை.
தவறு செய்பவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, அபராதமாக ஒரு தொகையை விதிப்பது போன்றவை தண்டனை முறைகளாக இருக்கின்றன. சில தவறுகளுக்கு இரண்டு தண்டனைகளும் ஒன்றாக விதிக்கப்படலாம்.
மரத்தடியில் அமர்ந்து தாத்தா கூறும் தீர்ப்புகளை கேட்பதற்கு ஊர் மக்கள் ஆர்வமுடன் கூடுவதை பெற்றோர் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் நான் இது போன்ற விஷயங்களை விரும்புவதில்லை.
ஆனால் என்னுடைய காதலுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதில் மகிழ்ச்சி. சரி வீட்டிற்கு வருவோம் வீட்டில் சென்டிமெண்ட் முடிந்து மதிய உணவும் அறுசுவையோடு முடிந்தது.
மாலை 5 மணிக்கு நான் மொட்டை மாடிக்கு சென்றேன். என் நண்பனை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அவனுக்கு நாட் ரீச்சபிள் என்று வரும்பொழுதே என்னை ஒரு கொலுசின் ஓசை ரீச் செய்து கொண்டிருந்தது. அவள்தான், அவளேதான் என் அருகில் வந்து என் கைவிரல்களை பிடித்துக்கொண்டே நல்லா இருக்கியா என்றாள்.
நான் பதிலேதும் கூறாமல் மௌனமாய் என் போனை எடுத்து அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே என்ற பாடலை சத்தமாக ஓட விட்டேன். அதற்கு பரிசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது. தொடரும்