Tuesday, April 28, 2020

காதல் என்னும் அத்தியாயம் 2:

நீங்க என்ற எண் கேள்விக்கு நான் என்ற நளின மொழியால் அந்த நங்கையின் உதடுகள் அவள் பெயரை என் காதுகளுக்கு காணிக்கை ஆக்கியது.
உடனே என் உதடுகள் உன் பெயரை சொல்லும் போது உள் நெஞ்சில் கொண்டாட்டம்; உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் என்ற பாடலை முணுமுணுத்தது.
மீண்டும் hello கேக்குதா என்றவுடன் கனவுலக கற்பனையில் மிதந்து கொண்டிருந்த நான் என்னை ஒரு முறை கிள்ளி பார்த்துக் கொண்டு நிஜ உலகத்திற்கு திரும்பினேன்.
உடனே சொல்லு, சொல்லு கேட்குது என்றேன். பொங்கல் வருது இல்ல உங்கள ஊருக்கு கூப்பிட அம்மா வீட்ல எல்லாருகிட்டயும் பேசணும்னு சொன்னாங்க அதனாலதான் call பண்ணேன் என்றால்.
நான் ஹாஸ்டல்ல இருக்கேன் அக்காவுக்கு கால் பண்ணு என்றேன். Ok நான் அக்காவுக்கு call பண்ணிக்கிறேன் என்றால். நான் phone னை வைக்கட்டுமா என்ற கேள்விக்கு மனசு வேண்டாம் என்றாலும் உதடு சரி என்றது.
அதன் பிறகுதான் எனக்கு நினைவுக்கு வந்தது நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தது எங்கள் சண்டைக்காரி இடம் என்று ஆனால் என் மனம் பெரியவங்களுக்கு உள்ள சண்டன நமக்கென்ன வந்தது என்று என்னை சமாதானப் படுத்தியது. இந்த சந்தோஷமான செய்தியை என் நண்பனிடம் கூற நான் ஓடினேன்.
அவன் கிரவுண்ட்ல cricket விளையாடிக்கொண்டிருந்தான். என்னுடைய சிரிப்பு கலந்த பேச்சிலிருந்து நடந்ததை யூகித்துக் கொண்ட என் நண்பன் என்னடா ஆளு call பண்ணா போல என்றான்.
உடனே நான் எப்படி டா என்றேன் அதான் முகத்தில் 100 வாட்ஸ் பல்ப் எரியுது என்றான். இருவரும் ஒருசேர நண்பேன்டா என்றோம். அங்கிருந்தவர்கள் இவனுங்க அலப்பறை தாங்க முடியலையே என்றார்கள்.
அவர்கள்  விளையாட என்னையும் அழைத்தார்கள் நானும் அவர்களோடு joined செய்துகொண்டேன்.
நாங்கள் விளையாடி விட்டு ஹாஸ்டலுக்கு வந்தோம் வழக்கம்போல என் நண்பன் அவனுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டான். அவனுடைய வேலையா என்னது அது என்பதுதானே உங்களுடைய கேள்வி? அவனுக்கு தெரிந்த இரண்டு விஷயம் ஒன்னு படிப்பு இன்னொன்னு cricket. 
Cricket already finished next? அதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.
நானும் படிப்பதற்கு முயற்சி செய்தேன் ஆனால், முடியவில்லை.
மனம் ஒரு குரங்கு மனம் அலைபாயும் என்றெல்லாம் மற்றவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன் இன்று தான் அதை நான் உணர்கிறேன். என் மனம் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது என்னுடைய சைனா செட் அத்த மக உன்ன நெனச்சு அழகு கவிதை ஒன்னு படிச்சேன் அத்தனையும் மறந்து புட்டேன் அடியே உன்ன பார்த்ததுமே என்று பாடியது.
நான் phone னை attend பண்ணி காதுல வச்சேன். Hello என்றாள் அக்கா சொல்லு என்றேன் நான். அத்தை இன்னைக்கு phone பண்ணாங்க என்றாள் வழக்கம் போல அப்பா பேசி இருக்க மாட்டாரே என்றேன் நான்.
இல்லை, இல்லை இன்னைக்கு அத்தை அப்பாகிட்ட பேசினாங்க அவங்களுக்கு உடம்பு சரி இல்லையாம் அதை சொல்லி புலம்பி ரொம்ப அழுது இருக்காங்க அப்பா சமாதானம் ஆயிட்டாரு அவங்க பொங்கலுக்கு நம்மள ஊருக்கு கூப்பிட்டாங்க அப்பாவும் வரன்னு சொல்லிட்டாரு.
ஊருக்கு என்றவுடன் எனக்கு ரொம்ப சந்தோசமா ஆயிடுச்சு அதை சொல்லத்தான் உனக்கு call பண்ணேன்.
 Ok நான் அப்புறம் கூப்பிடுறேன் என்று phone னை கட் செய்தாள்.
உடனே நான் என்னை மறந்து I am most happiest person in the world என்று கத்தி விட்டேன். தொடரும்

Friday, April 24, 2020

காதல் எனும் அத்தியாயம்1

காதல் என்னும் அத்தியாயம் 1: காதல் சொல்லும்பொதே சுவையானது; அது எனக்கும் அனுபவக் கதையானது.அது ஒரு அழகிய கனாக்காலம்; அப்பொழுது நான் பத்தாவது படித்து கொண்டு இருந்தேன்.எனக்கு friends னு  சொல்ல நாலு பேரு அதுள, best னு சொல்ல ஒருத்தன்.அவர்களின் கதைகளின் கதைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்களாம்.என் நெருங்கிய நண்பனிடம் எனது அத்தை பெணைப் பற்றி ஒருநாள் இரவு தூங்கும்போது சொல்லிக்கொண்டிருந்தேன்.அவனும் ஆர்வமாகக்க் கேட்டுக்கொண்டிருந்தான் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவனை பாடாய்ப் படுத்திவிட்டேன்.அதன் பிறகு இருவரும் தூங்கிவிட்டோம்.  காலையில ஒரு ஏழு மணி இருக்கும் என்னுடைய அலைபேசி அலறியது; phone பண்ணது யாருன்னா என்னுடைய அக்கா நான் அதை எடுத்துக்கிட்டு தனியா ரூமை விட்டு வெளியே போயிட்டேன் ஒரு அரை மணி நேரம் கழித்து பேசிவிட்டு அறைக்குள் வந்தேன். நான் அறைக்குள் வந்தவுடன் எனது நண்பன்அந்தப் பொன்னு தானுநெனச்சுக் கிட்டு என்னை பேசவிடாமல் கலாய்த்து தள்ளிவிட்டான்.இல்லடா அக்கா கிட்டஎன்றேன் அவன் மச்சி நீ யோகக்காரண்டா  அதுக்குள்ள அவுங்க அக்காவையும் correct பண்ணிட்ட என்றான்.உடனே நான் அவனை அடிக்கத் துரத்தினேன் அவன் sorry மச்சி school ளுக்கு time ஆச்சுவா குலிக்கப் போகளாம் என்றான்.கொஞ்ச நேரம் கழிச்சு இரண்டு பேரும்  குளிக்க போயிட்டோம் அதுக்கப்புறம் எப்ப பார்த்தாலும் அந்த பொண்ண பத்தி அவன் கிட்ட மட்டும் தான் பேசுவேன் அவனோ நான் பேசும்போதெல்லாம் வேற வழி இல்லாம கேட்டுக்கொண் டிருப்பான்.நானும் என் family யும் Chennai யில இருக்கோம். அவளும் அவ family யும் எங்க சொந்த ஊருல இருக்காங்க.   நாங்க எங்க ஊர விட்டு வந்து எட்டு வருடம் ஆகுது. அத்தைக்கும்  எங்களுக்கும் ஒரு சின்ன நிலத்தகராறு அதுல கோவிச்சுக்கிட்டு அப்பா சென்னைக்கு வந்துட்டாரு எங்களையும் ஊர் பக்கமே கூட்டிக்கொண்டே போகல, ஒரு நாள் அந்தப் பொண்ணு எனக்கு phone  பண்ணுச்சு அந்த நாள் எனக்கு சரியாக நினைவில் இல்லை ஆனா பொங்கல் நெருக்கத்தில் தான் phone பண்ணுச்சுனு மட்டும் தெரியும்.நான்  phone   attend பண்ணி காதில் வச்ச உடனே _  ஹலோ மென்மையாக ஒரு குரல் அதுவும் பெண்ணின் குரல் நான் யார் என்று யோசிப்பதற்குள் மறுபடியும் ஒருமுறை ஹலோ என்று அந்தப் பெண்ணின் குரல் மென்மையாக என் காதை தழுவியது அந்தப் பெண் நல்லா இருக்கியா என்று என் பெயரைச் சொல்லி கேட்டாள். இதுவரை இ இவ்வளவு மென்மையாக எந்தப் பெண்ணின் குரலையும் நான் போனில் கேட்டதில்லை மது குடித்தால் மதி மயங்குவது போல, அந்த மாதுவின் குரல் எனது மனதை மயக்கியது. அப்புறம் என்னை ஆசுவாசம் செய்து கொண்டு பதிலுக்கு நீங்க என்று கேட்டேன். தொடரும்

Tuesday, April 14, 2020

மனம் போனப்போக்கிளே:

நல்லது எது கெட்டது எதுநல்லவர் யார் கெட்டவர் யார் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டாள் நமது செய்கைகளும் நடத்தையும் விடைகளாகும். நம் நடத்தைக்கும் செய்கைக்கும் நாரதர், மனம் என்னும் மந்திர சாவி. காமத்தில் கட்டுண்டுகிடக்கும் ஒருவனுக்கு வேசியின் வாக்கே வேதவாக்கு என்பது போல, மனதோடு கட்டுண்டு கிடப்பது மூலை. மனதில் பெருகும் ஆசைகளுக்கு மருப்புச் சொல்லாமல் செயல்படுவதே அதன் வேலை. மனம் போநப் போக்கிளே மனிதன் போகளாமா? என்றால், நிச்சையமாகக்கூடாது. அதைத்தான் வள்ளுவர் சென்ற இடத்தால் செலவிடாது என்றார். புத்தர் துன்பத்திற்கு காரணம் பேராசை என்றார். இவற்றை நாம் படித்ததோடு மரந்துவிட்டுப் பாதைமாரி சென்றுகொண்டுஇருக்கிறோம். பகுத்தறிவை பெற்ற நாம் நன்மை தீமைகளைப் பகுக்க மறந்து மனித இணத்திற்கு அவப்பெயரை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆற்றுநீர் கடல் நீரில் கலந்து உப்புநீர் ஆவதுபோல, நன்மையும் தீமையும் கலந்து மனம் என்னும் கடலை உப்பாக்கிவிட்டது. உப்பு நீரை எவ்வளவு குடித்தாளும் தாகம் தீராது. அதன் விளைவே கொளை, கொல்லை, வன்கொடுமை போன்றவை. இதில் சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர் என்றபாரபச்சமே இல்லை. இது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அன்றாடம் நாம் படிக்கவும் பார்க்கவும் நேர்கிறது. இதற்கு தீர்வு நம் கையில். நாம் அடக்கவேண்டிய ஐம்புலன்களையும் அடக்கிவிட்டால் மனம் என்னும் மாலிகைக்கு திண்டுக்கல் பூட்டே போட்டுவிடளாம். புலன்களுக்குப்பூட்டு போட்டுவிட்டால் பலன்கள் தானாகக் கிடைக்கும்.                                     

Monday, April 13, 2020

காதல் கவிதை

முண்டக் கண் மீனழகே 3 Full stop 3 Exclamation mark

முத்துப் பல் சிரிப்பழகே 3 Full stop 3 Exclamation mark

பூந்தேகம் சிலையழகே 3 Full stop 3 Exclamation mark

நளினத்தில் தேரழகே 3 Full stop 3 Exclamation mark

உன்னை பார்த்தாலே தவிக்குதடி 3 Full stop 3 Exclamation mark

பாவி மனசு அலையுதடி 3 Full stop 3 Exclamation mark

உன்னை நானும் ரசிச்சாலே 3 Full stop 3 Exclamation mark

மோகப்பட்டு ஏங்குதடி 3 Full stop 3 Exclamation mark

காமன் கோவில் ரதியே 3 Full stop 3 Exclamation mark

உன்ன கொஞ்சனும் வெண்மதியே 3 Full stop 3 Exclamation mark

இன்பங்களின் மஞ்சம் 3 Full stop 3 Exclamation mark

என் சொர்க்கமடி அமுதே 3 Full stop ✍️,, Edit box

Saturday, April 11, 2020

கவிதை


மோகினீயே என் மோகத்தீயே; நஞ்சில்லா நாகினீயேநாவினிக்கும் நருங்கனியே;தேன் சுவையே தேவலோக அமுதே; நீலக்கடலின் ஆழ் முத்தே இப்பூவுலகின்பூங்கொத்தே; விலையில்லா என் சொத்தே காதல் கனியாய் கனிந்தாய் எனக்காக நான் கரைந்தேன் உனக்காகவா ஒன்றாக கலப்போம் நமக்காக.         

Thursday, April 9, 2020

தமிழர் பெருமை

நன்பர்களே ஒரு சிறிய முயற்ச்சி தவறு இருந்தால் திருத்தவும் பிடித்திருந்தால் பகிறவும்.
தன்னிலை தாழாமை தாழின் உயிர் வாழாமை;
சூழ்ட்சியில் விழாமை தோல்வியில் துவலாமை;
முயற்ச்சியை கைவிடாமை முயன்றால் வெள்ளும் பேறாண்மை;
உயற்வு தாழ்வு பாறாமை திய்யோரை சேறாமை;
பகைவரை பெறாமை இங்கில்லை பொறாமை;
இயலாமை, நிலையாமை, வறுமை இவற்றை விரும்பாமை; 
பிறரிடம் இறவாமை புறங்கூறாமை;
பிறர் மனை நோக்காமை தன்னிலை வழுவாமை இதுவே தமிழர் பெருமை.
இவை அனைத்தும் அன்று ஆனால் இன்று அனைவரும் உண்மை நேர்மை ஆகிய தன்மைகளை மரந்து பண்மையில் திரிந்து ஒருமையில் வாழ்கிறார்கள்.
இங்கு ஒருமை என்பது உயிரற்ற பொருளைக் குறிக்கும்., 11:14 p.m., 11:52 pm, In list, 10:51 pm