உறவு! உலகில் வாழும் உயிர்களுக்கு கிடைத்த பொதுவான வரவு. உதிரத்தில் பூத்த உயிர்கள் மட்டுமே உறவாக கருதிய காலம் போய் உறவை விஞ்சிய உயிர்கள் இல்லை என்றாகிவிட்டது. தாயின் கருவறை தொடங்கி கல்லறை வரை பல்வேறு பரிணாமங்களை பெற்று நம்மோடு பயணிக்கின்றது.
ஆண் பெண் என்று பொதுவாக தோன்றிய உயிர்கள் கணவன் மனைவி, தாத்தா பாட்டி, தாய் தந்தை, மகன் மகள், அக்கா தங்கை, அண்ணன் தம்பி, அத்தை மாமா, போன்ற ரத்த உறவுகளோடு நில்லாமல் காலத்தின் பரிணாம வளர்ச்சியால் மற்ற உறவுகளையும் சேர்த்துக்கொண்டது. இதில் முதன்மை பெறுவது மருமகன் மருமகள் இவர்கள் ரத்த உறவாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.
நாம் உறவின் உன்னதத்தில் இருந்து விலகி நீண்ட நாள் ஆகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் கூட்டுக்குடும்பம் குறுகி தனிக்குடும்பம் ஆனதே. இப்பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் தந்தை உடன்பிறப்பு தவிர மற்ற உறவுகள் தெரிவதில்லை காரணம் அவர்கள் குறுகிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகும். பெற்ற குழந்தைகளை பேணிக்காக்க பேயாய் அலைந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளோடு கொஞ்சுவதற்கு கூட நேரமில்லை.
தாய்ப்பால் புட்டிபால் ஆகிவிட்டது.
வேலைக்காரி நிரந்தர தாயாகி விட்டாள். இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு அதாவது பெற்றோர்கள் வேலைக்கு சென்று வரும் வரை குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு குழந்தைகள் பராமரிப்பகம் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இத்தகைய சூழலில் வளர்ந்து வருபவர்கள் அன்பு, பாசம் போன்றவற்றை மற்றவர் இடத்தில் எதிர்பார்க்கிறார்கள்.
அதனை கொடுக்க தயாராக இருப்பவர்களை புதிய உறவுகளாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு பூக்கும் உறவுகளே காதல், நட்பு போன்றவையாகும். இவற்றால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.
உடைந்த கண்ணாடி துகள்களை கொண்டு மீண்டும் புதியதோர் கண்ணாடியை செய்து விடலாம். அது போலத்தான் உறவுகளும் உடைந்தால் ஒட்ட வைத்து விடலாம். ஆனால், ஒட்டியதை உடையாமல் பார்த்துக் கொள்வதுதான் கஷ்டம். அதைத்தான் தாத்தா என் பெற்றோரிடமும் அத்தையிடமும் கூறிக்கொண்டிருந்தார்.
நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் ஒட்டிய எங்கள் உறவை உடையாமல் நீட்டிக்க அவர் சொன்ன ஐடியா தான் என் மகிழ்ச்சிக்கு காரணம். அவர் சொன்ன அந்த ஐடியாவருங்காலத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது. அதனைக் கேட்ட என் பெற்றோரும் அத்தையும் குழந்தைகளின் படிப்பு முடியட்டும் அதன் பிறகு இதை பற்றி யோசிக்கலாம் என்றனர்.
அவர்கள் கூறிய பிறகு என்பதன் அர்த்தம் நீண்ட நாளைக்கு பிறகு தான் எனக்கு புரிந்தது. என்னவளுக்கு இதயத்தில் கட்டிய காதல் கோட்டைக்கு அதுவரை கடகால் மட்டுமே போடப்பட்டிருந்தது. தாத்தா கூறிய வார்த்தைகளால் கோட்டை குபீரென எழுந்து வசந்தமாளிகை க்கும் தாஜ்மஹாலுக்கும் இடையே ஒரு வடிவம் கொண்டு நின்றது.
அந்த நொடி முதல் அவளை என் காதல் கோட்டைக்குள் குடி ஏற்றிவிட்டு அவளோடு சேர்ந்து வாழ தொடங்கிவிட்டேன். தாத்தாவிடம் பேசி முடித்த பிறகு ஊருக்கு கிளம்பி விட்டோம். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை என் நண்பனிடம் ஃபோனில் கூறினேன்.
அதை கேட்ட அவனுக்கு அவன் காதல் கை கூடியது போல அப்படி ஒரு மகிழ்ச்சி. மச்சி treat வை டா என்றான். நாளைக்கு school ளுக்கு போறோம் இல்ல அப்ப பாத்துக்கலாம் என்றேன்.
School ளுக்கு போனேன்னு தான் பேரு படிப்பில் நாட்டமில்லை, பசி எடுத்தும் சாப்பாட்டில் ருசி இல்லை,, தண்ணீர் இருந்தும் தாகம் இல்லை, விளையாட்டின் மீது மோகம் இல்லை, இரவை கடந்தும் உறக்கமில்லை, பகலுக்கு கூட என்மேல் இரக்கம் இல்லை.
எப்பொழுதும் ஒரே நினைவு எதிர்கால வாழ்வின் கற்பனைக் கனவு. விழித்துக்கொண்டு நான் காணும் கனவிற்கு ஒருபொழுதும் உறக்கம் வந்ததே இல்லை. தனிமை வாட்டிய போதெல்லாம் ஆறுதலாய் அருகில் நண்பன். நட்பு எனும் விழுது இல்லாவிட்டால் பலருடைய வாழ்வில் காதல் என்னும் மரம் செழித்து வளர்வதற்கு வாய்ப்பே இல்லை.
காதல் என்றாலே அதற்கு பல, வண்ண சாயங்கள் பூசி கைகழுவும் உறவுகள் மத்தியில் இரு கரங்கள் இணைய ஒரு குடையின் கீழ் பூக்கும் ஓராயிரம் பூக்களே நட்பு.
அத்தகைய நட்பை நான் பெற்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு நாள் என் ஏக்கத்தீயைய் அணைக்க அவளிடமிருந்து போன் கால் வந்தது. ஆனால், அதிர்ஷ்டம் இல்லாத நான் அந்த போன்காலை மிஸ் செய்து விட்டேன். நான் என் போனை சார்ஜ் போடுவதற்காக என் நண்பனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டேன். எங்கு போய் இருந்தேன் என்பது எனக்கு சரிவர நினைவில்லை.
போனை அட்டெண்ட் செய்து பேசிய என் நண்பன் அதை என்னிடம் கொடுக்க பல இடங்களில் என்னைத் தேடி பார்த்து இருக்கிறான்.. அவனுக்கும் நான் எங்கே சென்று இருந்தேன் என்பது தெரியாது. வேறு வழி இல்லாமல் விஷயத்தை. அவளிடம் கூறினான். ஆசை, ஆசையாய் என்னிடம் பேச போன் செய்து இருந்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நண்பன் கூறியதை கேட்ட அவள் அண்ணா நாளைக்கு இதே டைமுக்கு நான் போன் பண்ணுவேன்னு அவன் கிட்ட சொல்லிடுங்க என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள்.
மேலே கூறிய அனைத்தும் நான் திரும்ப வந்தவுடன் என் நண்பன் என்னிடம் கூறியது.. என் மீது எனக்கே கோபம் வந்தது. கடவுளைக் கூட திட்ட தோன்றியது. என்நிலை அறிந்து நண்பன் வருத்தப்பட்டான். கடைசியில் அவனை நான் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு முறையும் நாம் தவறவிடும் ஏதோ ஒரு விஷயம் நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்த முயற்சிக்கிறது. அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது, சிலருக்கு இன்பத்தையும் பலருக்கு துன்பத்தையும் தரலாம். இன்பதுன்ப வரவுகள் அதிர்ஷ்டசாலிகளை பொருத்தது.
நீண்டநாள் ஏக்கத்தோடு காத்திருந்த நான் அவள் சொன்ன அந்த time காக காத்திருந்தேன். அந்த time மும் வந்தது அவளிடமிருந்து phone னும் வந்தது. hello என்று அவள் குரலை கேட்டால் ஆகாயத்திலிருந்து ஆண்டவன் கூட வழுக்கி விழுந்து விடுவான். அவனே அப்படின்னா அற்ப மனிதன் நான் வழுக்காமலே விழுந்துவிட்டேன்.
நானும் hello என்றேன். நல்லா இருக்கியா, சாப்பிட்டியா, வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க, படிப்பு எப்படி போகுது இவை அனைத்தும் நாங்கள் மாற்றி, மாற்றி ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்ட கேள்விகளாகும்.
அதன் பிறகு என்ன பேசுவதென்றே இருவருக்கும் தெரியவில்லை. மீண்டும் நானே ஆரம்பித்தேன். தாத்தா கூறியதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்றேன். அவள் அதற்கு தாத்தா என்ன கூறினார்? என்று கேட்டுவிட்டு சிரித்தாள்.
அவள் சிரிப்பு எனக்கு வெறுப்பாக இருந்தாலும் நான் மௌனமாக இருந்தேன். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவள் நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டாள். கள்ளி தெரிந்துகொண்டே நடிக்கிறாள் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டேன். தொடரும், Edit box, 1 of, 2
No comments:
Post a Comment