Sunday, May 31, 2020

காதல் என்னும் அத்தியாயம் 7

வாங்க பாட்டுப்போட்டி பாதியிலேயே நிக்குது மீதமுள்ள இசை குயில்களின் இசையைக் கேட்டு விடலாம். அடுத்து பாடுபவர் இன் பெயரை தொகுப்பாளர் வாசிக்க ஆசை மச்சான் வாங்கி தந்த மல்லியப்பூ அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு என்று சொர்ணலதாவின் தங்கச்சி போல் பாட அதைக்கேட்டு மல்லிகைப்பூ வாங்க மறந்த ஆண்கள் சிலர் மனைவிகளைப் பார்த்து கண்ணடிக்க அவர்கள் கண்ணம் சிவக்க அப்புறம் என்னஇரவு இன்பமயம் தான் என்று மல்லிகைப் பூ வாங்க மச்சான்கள் புறப்பட்டனர்.
இது இப்படி இருக்க அடுத்து வந்தவர் நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல என்று தொடங்க பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த சில குமரிகள் மேடையை நோக்கி உன் தூக்கத்தை கெடுத்தது யார்? என்று கேட்டு கேலியும் கிண்டலும் மாய் சிரித்தனர். அவர்களுடைய சிரிப்பு இசைக்கு இனிய ராகம் சேர்த்தது.
நீங்கள் திட்டுவது எனக்கு கேட்கிறது; உங்கள் பொறுமைக்கு நன்றி. அடுத்து வருவது அவள்தான் எல்லோரும் காத்திருந்தது இதற்காகத்தான் என்பது அவர்களுடைய உற்சாக வரவேற்பிளே தெரிந்தது. எனக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை.
அடுத்து நடப்பதை அறியும் time machine போல, எனக்கும் ஒரு power இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
இப்படி நான் எனக்குள் யோசித்துக் கொண்டிருக்க அடுத்து நீங்கள் கேட்க இருக்கும் பாடல் ராஜா sir இசையில் ஜானகி அம்மா பாடியது. அந்த பாடல்  இப்பொழுது நம்ம ஊரு ஜானகியின் குரலில் என்று தொகுப்பாளர் அவர் பங்குக்கு ஏதோ ஒன்றை சொல்லி வைக்க கூட்டம் ஆர்ப்பரித்தது. அவள் குரலோ எனை இழுத்தது.
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே என்ற மெல்லிசை அவள் மென்மையான குரல் ஓசையில் மெருகேறி கொண்டிருந்தது. என் இதயம் இடம் மாறிக் கொண்டிருந்தது.
இதயத்தை ஈர்த்த அந்த வரிகள் இதோ உங்களுக்காக உன்னை எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னி பொண்ணு தானே என் மாமனே, என் மாமனே ஒத்தையிலே அத்த மக உன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணுரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே என்று பாடி முடிக்க (செம்புல பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!) என்ற சங்க இலக்கிய வரிகள் சாட்சியாக இரு இதயங்கள் இரண்டறக் கலந்தன.
என்னவள் பாடி முடித்ததும் தொகுப்பாளர் இத்துடன் பாட்டுப்போட்டி முடிவடைந்தது என்று கூறி முடித்து வைத்தார். அடுத்து வரவேற்புரையுடன் பரிசளிப்பு விழா தொடங்கியது. பாட்டு போட்டியின் முடிவுகளை அறிந்துகொள்ள உங்களைப் போல் எனக்கும் ஆர்வமாய் இருந்தது.ஆனால் முதலில் மற்ற போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாட்டு போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு முதல் பரிசு பெற்றவர் ஊர் பெரியவர்களுக்காக மீண்டும் ஒருமுறை மேடையில் தனது பாடலை பாடினார்.
எல்லோருடனும் சேர்ந்து மீண்டும் புதிதாய் கேட்பது போல நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்பிறகு பாட்டு போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. மூன்றாம் பரிசு சின்ன சின்ந ஆசை என்ற பாடலை பாடியவருக்கும் இரண்டாம் பரிசு நான் ஆளான தாமர என்ற பாடலை பாடியவருக்கும், முதல் பரிசு என்னவளுக்கும் கிடைத்தது.
அதை தொடர்ந்து வெற்றியாளர்கள் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்க
நன்றி உரையோடு பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது. சற்று நேரத்தில் மைதானத்தில் இருந்த அனைவரும் கலைந்து அவரவர் வீட்டிற்கு செல்ல தொடங்கினர். நாங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அவள் பரிசுகளை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து பார்க்க சொன்னாள். அதில் இரண்டு hot box சும் ஒரு tiffin box சும் இருந்தது. நான் அதை பார்த்து விட்டு அவளிடம் கொடுத்து விட்டேன்.
அத்தைக்கு ஒரே பெரு மிதம் மகள் வாங்கிய பரிசுகளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டே அனைவரும் தூங்கி விட்டோம். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். ஆனால், நாங்கள் வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. அதனால் காலை உணவை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாரானோம்.
அத்தை மேலும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு போகலாம் என்றார். ஆனால், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வேலை செய்யும் இடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே விடுமுறை கொடுத்து இருந்ததால் அதனைக் கூறி அத்தையை சமாதானப் படுத்திவிட்டார்கள். கிளம்பும் பொழுது தாத்தா என் கையை பிடித்துக்கொண்டு அடிக்கடி தாத்தாவைப் பார்க்க வரணும் என்றார்.
நான் சரி தாத்தா கோடை விடுமுறைக்கு வருகிறேன் என்றேன். அடுத்து தாத்தா அப்பா, அம்மா, அத்தை ஆகியோரை அழைத்து கூறிய செய்தி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்க செய்தது. அச்செய்தி எனக்கு கரும்பு சாற்றுடன் தேன் கலந்து அத்தோடு முக்கனியின் சுவை கூட்டி தயாரித்த அமுழ்தம் போன்றது.
என் இதயம் இயக்க வேகத்தை கூட்டி இன்ப சுற்றுலா சென்று கொண்டிருந்தது. தொடரும், Edit box, 1 of 2

1 comment:

  1. மன்னிக்கவும் தோழரே நீங்கள் என்று பதிவிட்ட பதிவுக்கு இன்று நான் பதிலளிக்கிறேன் அதற்கு முதலில் உங்களிடம் மனப்பூர்வமான மன்னிப்பை சமர்ப்பிக்கிறேன் நன்றி நன்றி இன்னும் உங்களது படிப்பு இன்னும் தெளிவாக இருந்தால் படிப்பதற்கு ஆவலாக இருக்கும் இப்பவும் அவன் ஆகத்தான் இருக்கிறது அடுத்த பதிவு எப்போது வரும் என்று வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

    ReplyDelete