Friday, June 26, 2020

காதல் என்னும் அத்தியாயம் 9

மனதிற்குள் அவளை திட்டிய நான் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நான் என்ன நினைக்கிறேன் என்று உனக்கு தெரியாதா? என்றேன். தெரியும் ஆனால், என்று அவள் இழுத்தாள். வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தம் என்னை ஏதோ செய்தது.
மனம் பதறிப்போய் பலவற்றை யோசிக்க இதயம் இக்கணமே துடிப்பை நிறுத்தி விடவா? என்றது. மறுகணமே முடிவை மாற்றிக்கொண்டு இல்லை, இல்லை நான் துடிப்பதே அவளுக்காக தான் அவள் சொல்லட்டும் துடிக்கவா அல்லது துடிப்பை துண்டிக்க வா என்று.
என்று தனக்குள்ளே பேசிக் கொண்டது. மேலும் என் இதயத்தை இன்னலுக்கு உள்ளாக்க விரும்பாமல் நானே தொடர்ந்தேன். தாத்தா கூறியது நடந்தால்அது தான் இந்த ஜென்மத்தில் நான் செய்த பாக்கியம் என்றேன்.
என்ன உனக்கு அவ்வளவு பிடிக்குமா? என்று அவள் உதட்டில் இருந்து உதிர்த்த வார்த்தைகள் எனக்குள்ளே ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்தியது.
அம்மா, அக்கா ஆகிய இருவருக்கு பிறகு எனக்கு ரொம்ப பிடித்த பெண் நீதான். காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது.
காரணமே இல்லாமல் வருவதற்குப் பெயர் தான் காதல் என்றால் இதுக்கும் அதுதான் பேரு. அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நெருக்கத்தொடு உருக்கம், பேசும் நேரம் தவறினால் தவிப்பு, நெஞ்சமெல்லாம் அதே நினைப்பு இவை யாவும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கிடைப்பது.
அந்த ஒருவர் பெற்ற தாய், பேணி வளர்க்கும் தந்தை, உடன்பிறப்பு, உற்றார் உறவினர், உயிர் கொடுக்கும் நட்பு இப்படி யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் தாய் தனக்கு கிடைக்காத ஒன்றை கூட தன் குழந்தைக்கு முழுமையாக கொடுப்பவள்.
தந்தையும் அதற்கு சளைத்தவரல்ல. இருப்பினும் தாய் முதன்மை பெறுகிறார். தந்தை கொடுக்கும் ஒரு அணுவை தனக்குள் வாங்கி அதனை அணுகுண்டு ஆக்கி அடைகாத்து உடல் கொடுத்து உயிர் கொடுத்து உலகிற்கு தருவிக்கும் தாய் முதன்மை பெறுவதில் தவறு ஒன்றும் இல்லை அல்லவா?.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். என்னை பொருத்தவரை மாதா, பிதா, நட்பு, தாரம் அதாவது மனைவி என்ற வரிசையே சரியானது. இந்த வரிசையில் நான் தாயின் உருவத்தில் தெய்வத்தையும் தந்தையின் அறிவில் ஆசானையும் காண்பதால் குருவும் தெய்வமும் தவிர்க்க படவில்லை முதன்மை படுத்தப்படுகிறார்கள்.
கண்ணதாசன் வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, என்று கூறிவிட்டு கடைசி வரை யாரோ? என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார்.
அதற்கு என்னிடம் உள்ள பதில் நட்பு. உண்மையான நட்பு, ஆபத்தில் உதவும் நட்பு, உயிரைக் கொடுக்கும் நட்பு, தன்னலமற்ற நட்பு கடைசி வரை இருக்கும். நட்பு பள்ளிப்பருவ நட்பு, கல்லூரியில் கிடைக்கும் நட்பு, வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் நட்பு, நாம் செய்யும் business மூலம் கிடைக்கும் நட்பு என்று பல பரிமாணங்களைக் கொண்டது.
சுருக்கமாக சொன்னால் புதிதாக கிடைக்கும் முன் பின் தெரியாத ஒருவருடைய அறிமுகம் today onwards we are friends என்பதிலேயே முடியும். ஒரு படி மேலே போய் சொன்னால் நாம் காதலிப்பவர்களை கூட வீட்டில் நண்பர்களாகத்தான் அறிமுகப்படுத்துவோம். இப்படிப்பட்ட நட்பு கடைசிவரை இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அடுத்து மனைவி நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் உறவு இடையில் வருவது. பெற்றோர்களுக்கு பிள்ளை என்பது இடையில் வந்த உறவு, இது கணவன்,, மனைவி, பிள்ளை என தொடர நாம் வளர்ந்து சமூகத்தில் வாழத் தொடங்கும் பொழுது மற்றவர்களும் சேர்ந்து கொள்கின்றன.
இந்த உறவுகளுக்கு licence எதுவும் கிடையாது. இடையில் வந்தது தடையில் முடியலாம். ஆனால், மனைவி நம்மிடம் தாலி எனும் licence சை வாங்கிக்கொண்டு இடைவெளியில்லாமல் நம்மோடு வாழ்பவள்.
தாய்க்கு அடுத்தபடி நம் வாழ்வின் பாரத்தை பகிர்ந்துகொள்ளும் தாரம், இறைவன் கொடுத்த ஒரு வரம்!. நீ ஏன்? எனக்கு அந்த வரமாக இருக்கக்கூடாது என்றேன்.
உடனே அவள் எனக்கு உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு நான் இன்னும் உன் வாழ்வில் வரவே இல்லை ஆனால் இப்பொழுதே என் மீது உனக்கு இவ்வளவு பாசம் இன்னைக்கு எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடைந்துவிட்ட பேரானந்தம் என்றாள்.
சரி காயின் காலி ஆயிடுச்சு நாளைக்கு கால் பண்றேன் என்று கூறிவிட்டு காலை கட் செய்து விட்டாள்.
என்ன? காயினா ஆமாங்க என் காதலை வளர்த்தது one rupee coin box. எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் அவள் ஓகே சொன்னாளா? இல்லையா? என்று ஒரு டவுட்டூ.
நடந்ததைக் கூறி நண்பனிடம் கேட்டேன். மச்சி நீ பையன்டா open னா சொல்லிட்ட என்னதான் இருந்தாலும் அவளும் பெண் தானே! இந்த அச்சம், நானம், மடம், பயிர்ப்பு அதெல்லாம் இருக்க தானே செய்யும்.
மறைமுகமாகத்தான் சொல்லுவாங்க நம்ம தான் புரிஞ்சுக்கணும். நான் மீண்டும் ஒரு முறை மச்சி confirm தான? என்றேன். அதற்கு அவன் hundred percent success தான் என்றான்.
மச்சி இதை நம்ம celebrate பண்ணியே ஆகணும் டா night சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வாங்கட்டுமா? என்றான். நான்  எனக்கு chicken குழம்பு என்றேன். ஓகே உனக்கு மீன் குழம்பு பிடிக்காது என்று எனக்கு தெரியும். உனக்கு மட்டும் chicken குழம்பு வாங்க சொல்லி விடுறேன் என்றான்.
ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறவங்களுக்கு தெரியும் ஹாஸ்டல் சாப்பாடு எப்படினு எங்க ஹாஸ்டல் சாம்பாரையும் சைடிஷ் சையும் சமாளிக்க பெரும்பாலும் night சாப்பாட்டுக்கு ஹோட்டல்ல கொழம்பு வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
எப்போதாவது இட்லிக்கு வடகறி வாங்குவது உண்டு. இவ்வாறு வாங்கி சாப்பிடும் நண்பர்கள் குழுவில் ஐந்து பேர் நான்கு பேர் இருப்பார்கள் இவர்கள் turn அடிப்படையில் ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது ஒரு வாரத்திற்கு ஒருவர் என்று வாங்கி சாப்பிடுவார்கள்.
இதனை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பார்வையற்றவர்கள் எப்படி வெளியில் சென்று ஓட்டலில் வாங்கி வருவார்கள் என்ற சந்தேகம் ஏற்படலாம். பார்வையற்றவர்களில் முழு பார்வையற்றோர் குறை பார்வை உடையோர் என்று இரண்டு பிரிவினர் உண்டு.
பெரும்பாலும் வெளியில் செல்லும்பொழுது குறை பார்வை உடையோர் முற்றிலும் பார்வை இழந்தவருக்கு உதவியாக செல்வார்கள். அப்படியில்லையென்றால் ஊன்றுகோலை பயன்படுத்துவார்கள். பழகிய இடங்களில் முற்றிலும் பார்வையற்றோருக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது.
எங்கள் ஹாஸ்டலை சுற்றியுள்ள இடங்கள் பழகி இருந்ததால் நாங்களே வெளியில் சென்று எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து விடுவோம்.
நாங்கள் வழக்கமாக குழம்பு வாங்கும் கடையை நடத்துபவர் பெயர் செல்வம் அவர் எங்களோடு நன்றாக பழகுவார். இரவில் எவ்வளவு லேட்டாக சென்றாலும் எங்களுக்காக காத்திருந்து நாங்கள் வாங்கிய பிறகே கடையை அடைத்து விட்டு செல்வார்.
மதிய உணவுக்காக வைக்கப்படும் குழம்பு சில நேரங்களில் மீந்துவிடும் அதனை வீணாக்க விரும்பாதவர்கள் இப்படி காசாக்கி விடுவார்கள். நேரம் கடந்து சாப்பிடும் மீன் குழம்பிற்கு ருசி அதிகம் என்பார்கள்.
ருசியான குழம்புடன் இரவு உணவு நன்றாக முடிந்தது. மாலை நானும் அவளும் பேசிக்கொண்டதை நண்பனிடம் கூறிக்கொண்டே அவள் நினைவில் நிம்மதியாக உறங்கி விட்டேன். தொடரும், 1 of 2, In list, 2,  items

No comments:

Post a Comment