Saturday, May 23, 2020

காதல் என்னும் அத்தியாயம் 6:

கடையில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பிறகு அனைவரும் மீண்டும் நடக்கத் தொடங்கினோம். மாலை நேர சூரியன் மறைந்து கொண்டிருந்தது. இளம் குளிர் காற்று வீச அவள் துப்பட்டா என் முகத்தோடு பேசஅதை மற்றொரு கையில் பிடித்து செல்லமாக கடிந்து கொண்டாள்.
அதன் சுவாசத்தில் அவள் வாசத்தை உணர்ந்தேன் மேலும் அவள் செய்கையால் பாசத்தை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் அனைவரும் கோயிலை அடைந்தோம். கோயில் பூசாரி அப்பாவுக்கு தெரிந்தவர் முன்பே சொல்லி வைத்தபடி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.
எங்களை பார்த்தவுடன் பூசாரி வாங்க, வாங்க எல்லாரும் சேமமா என்று நலம் விசாரித்தார். அதன்பிறகு பூஜைக்கு நாழி ஆயிடுச்சு வாங்கோ என்றார்.எல்லோரும் கோயிலுக்குள் சென்று பூஜையை நன்றாக முடித்து விட்டு வெளியில் வந்தோம்.
என்ன மெட்ராஸ் காரரே இப்ப தான் இங்க வரதுக்கு உங்களுக்கு நேரம் கிடைச்சதா? என்ற ஒருவரிடம் அப்பா எங்களை‌ introduce பண்ணி வைத்தார். யாரோ ஊர் பெரியவர் என்றார்.
இப்படியே எங்களை நலம் விசாரித்த நாலு ஐந்து பேரிடம் பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தோம். இரவு உணவை முடித்து விட்டு ரொம்ப டயர்டாக இருந்ததால் எல்லோரும் தூங்க சென்று விட்டோம்.
காலையில் மாட்டு பொங்கலை மகிழ்வோடு கொண்டாட சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து தயாரானோம். உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் பெருமையாக அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் மாட்டுப் பொங்கல் உழவனின் உடல், பொருள், ஆவியாக விலங்கும் மாடுகளை சிறப்பிக்கும் வகையில் அமையும்.
மாடுகளை வைத்திருக்கும் உழவர்கள் அவற்றை நன்றாக குளிப்பாட்டி கொம்புகளை சீவி அதற்கு வண்ணமிட்டு வண்ண வண்ணப் பொட்டுகளால் அழகாக அலங்கரிப்பார்கள். அதை பார்ப்பதற்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். நாள்தோறும் அவ்வாறு பராமரிக்க பட்டாள் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.
அடிக்கடி நடைபெறும் ஒன்று புதுமையாக தோன்றாது அல்லவா? அதனால்தான் உழவர்களின் செல்வங்கள் ஆகிய மாடுகள் வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. அதன் பிறகு பொங்கல் வைத்து படைத்துவிட்டு மாடுகளுக்கு கொடுப்பார்கள்.
எங்கள் வீட்டில் மாடுகள் இல்லை அதனால் அவ்வளவு சிறப்பாக கொண்டாடவில்லை. எங்கள் வீட்டில் மதிய உணவிற்காக ஆடு, கோழி, மீன் என வகைவகையான அசைவ உணவு தயாராகிக்கொண்டிருந்தன. பொதுவாக மாட்டுப்பொங்கலன்று அனைவர் வீட்டிலும் அசைவ உணவு செய்வது வழக்கம்.
மதிய உணவு நன்றாக இருந்தது. அன்றைய நாள் போரடிக்காமல் செல்ல அடுத்த நாள் ஊரே கலை கட்டியது. அடுத்த நாள் காணும் பொங்கல் அன்றுதான் பொங்கல் கொண்டாட்டம் முழுமை பெறும். பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
குட்டீஸ்களுக்கு பலுன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போன்றவையும் இளவட்ட ஆண்களுக்கு மட்டைப்பந்து, கபடி, நீச்சல் போன்றவையும் குமரி களுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி போன்றவையும் பொதுவான போட்டிகளாக உரி அடித்தல், கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவையும் நடைபெறும்.
போட்டிகளை எவ்வித பிரச்சனையும் இன்றி நடத்தி தருவது ஊர் இளைஞர்களுடைய பொறுப்பு. பரிசுகள் கொடுக்கும் பொறுப்பை ஊர் பெரியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
போட்டிகள் ஊர் கோவில் முன்பு இருக்கும் பொது மைதானத்தில் நடைபெறும். போட்டியாளர்களை உற்சாகப்படுத்த ஊர் மக்கள் அனைவரும் மைதானத்தில் கூடுவர். பெற்றோர்கள் குழந்தைகளையும், கணவர்கள் மனைவிகளையும், மனைவிகள் கணவர்களையும், நண்பர்கள் தங்கள் நண்பர்களையும், காதலர்கள் தங்கள் காதலர்களையும் கைதட்டி உற்சாகப் படுத்துவார்கள்.
போட்டியில் தோற்று விட்டால் ஆண் பெண் என்ற பாரபட்சமில்லாமல் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள். சிலர் பெற்றோர்களுக்காக, சிலர் மனைவிக்காக, சிலர் கணவருக்காக, சிலர் காதலர்களுக்காக, சிலர் நண்பர்களுக்காக, சிலர் ஊரில் கெத்தாக திரிவதற்காக, சிலர் முந்தைய வருடங்களின் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக என வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் இருக்கும்.
போட்டி என்றால் வெற்றி தோல்வி இரண்டில் ஒன்று நிச்சயம். அன்று அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர் வசம் வெற்றி. அதனால் போட்டிகள் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்காய் அமையும்.
இத்தனை போட்டிகளையும் ஒரே நாளில் நடத்துவது என்பது கடினமான ஒன்று. அதனால் சில போட்டிகள் முன்பே திட்டமிட்டு. நடத்தப்படும். நாங்கள் ஊரில் இருந்து வந்ததால் பார்வையாளர்களாகவே இருந்தோம். போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே போட்டியில் கலந்து கொள்ளாத மற்றவர்கள் தங்கள் தனித் திறமையைக் காட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்ளாத ஆண் பெண் இளவட்டங்கள் தங்கள் நடன திறமைகளை அரங்கேற்று வார்கள். போட்டியை கண்டு களிப்போர் இடையிடையே தங்கள் பார்வையை மேடையின் மீது  செலுத்துவார்கள். சிலர் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட போட்டியிலும் பொதுவான போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.
அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. சிலர் விருப்பப்பட்ட போட்டியில் மட்டும் கலந்து கொள்வார்கள். சிலர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு இருப்பார்கள். பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர்கள் மீது கொண்ட நம்பிக்கையால் சில போட்டிகளில் அவர்களிடம் கேட்காமலேயே பெயர்களை கொடுத்துவிடுவார்கள் அதுபோன்றுதான் இவர்களும் சேர்க்கப்பட்டார்கள்.
என்னவள் கோலப்போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி மற்றும் குழு போட்டியான கயிறு இழுத்தல் ஆகியவற்றில் கலந்து கொண்டாள். அவளுக்கென மைதானத்தில் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரத்தோடு அவளை உற்சாகப்படுத்தினர். நானும் அவர்களோடு கலந்து கொண்டேன்.
கயிறு இழுத்தல் போட்டியில் அவள் குழு தோற்றுவிட்டது. ஆனால் அவளுக்கு கோலப் போட்டியில் மூன்றாவது பரிசும் இசை நாற்காலியில் முதல் பரிசும் கிடைத்தது. இசை என்பது நியூட்டனின் ஈர்ப்பு விசை போன்றது அது இளசுகள் தொடங்கி பெருசுகள் வரை அனைவரையும் ஈர்த்துவிடும். இறுதியாக பாட்டுப் போட்டி தொடங்கியது.
முதலாவதாக வந்த பெண் சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை, முத்து முத்து ஆசை, முடிந்து வைத்த ஆசை என்று தொடங்க அடுத்து வந்தவர் ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு ஊறுகாயா நான் இருக்கேன் என்று பாட ஆரவாரம் அதிகமானது. தொடரும், Edit box, 1 of,  2

1 comment:

  1. உனக்கும் தோழமை இன்னும் நீங்கள் எழுத வாழ்த்துக்கள் இன்னும் விருப்பு விருவிருப்பாக சென்றால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து நான் ஏதாவது தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete